டாப் 10 பாப்புலரான நடிகர்கள்; ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய விஜய் - ரஜினி லிஸ்ட்லயே இல்ல!
இந்தியாவில் பாப்புலராக உள்ள டாப் 10 நடிகர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் மீடியா தளம் வெளியிட்டுள்ளது. அதில் யார்... யார் இடம்பிடித்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.

Top 10 Popular Actors in India : இந்தியாவில் பாப்புலராக உள்ள டாப் 10 முன்னணி நடிகர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த தரவரிசை பட்டியலை ஓர்மாக்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி இந்த பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் தென்னிந்திய நடிகர்களின் ஆதிக்கத்தால் பாலிவுட் நடிகர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நடிகர் பிரபாஸ் தான். இவருக்கு சமீபத்தில் எந்த திரைப்படமும் வெளியாகாவிட்டாலும், பிரபாஸ் வரவிருக்கும் திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இதுவே அவர் இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்க காரணம்.
vijay
பாப்புலரான இந்திய நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய் இரண்டாம் இடத்தில் உள்ளார். விஜய் அரசியலில் நுழைந்துள்ளதால் அவர் தொடர்பான செய்திகளில் தொடர்ந்து வருகின்றன. அவரது 'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. எச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார். ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிவடையும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படம் 2026 ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இப்படி ஒரு ரோலா?
Jana Nayagan
ஜன நாயகன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா இப்படத்தை தயாரிக்கிறார். தளபதி விஜய்யின் விருப்பமான இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் ஆகியோர் ஒரு பாடலில் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த தகவலும் விஜய்யை சமீபத்தில் செய்திகளில் இடம்பெற செய்தது.
Top 10 Actors
இந்தியாவின் டாப் 10 பாப்புலரான நடிகர்கள் பட்டியலில் புஷ்பா 2 நாயகன் அல்லு அர்ஜுன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஷாருக் கானுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. முன்னதாக ஷாருக் கான் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். கேம் சேஞ்ஜர் பட நாயகன் ராம் சரண் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் மகேஷ் பாபு ஆறாவது இடத்திலும், குட் பேட் அக்லி ஹீரோ அஜித் குமார் ஏழாவது இடத்திலும் உள்ளனர். ஜூனியர் என்டிஆர் எட்டாவது இடத்திலும், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் கடைசி இரண்டு இடங்களிலும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... விஜய் முதல் SK வரை; டாப் 10 தமிழ் ஹீரோஸுக்கு எந்த வயசுல திருமணம் ஆனது?