MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பெரிய ஹீரோ இல்ல, பட்ஜெட் இல்ல, பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய தமிழ் படங்கள்!

பெரிய ஹீரோ இல்ல, பட்ஜெட் இல்ல, பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய தமிழ் படங்கள்!

தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி அதிக வசூல் செய்த படங்கள் பல உள்ளன. LKG, இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, 96, ராட்சசன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

3 Min read
Ramya s
Published : Aug 20 2024, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

தமிழ் சினிமாவில் எண்ணற்ற இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் இருக்கின்றனர். வித்தியாசமான கதைக்களம், புதுமையான திரைக்கதை, மேக்கிங் மூலம் தமிழ் சினிமா இயக்குனர்கள் கவனம் ஈர்த்து வருகின்றனர். பெரிய பட்ஜெட் படங்கள்,  உச்ச நடிகர்களின் படங்கள் அதிக வசூல் செய்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவான பல அதிக வசூல் செய்து அசத்தி உள்ளன. அந்த வகையில் தமிழ்த் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க அதிக வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

211
LKG

LKG

அரசியல் நையாண்டி படமாக உருவான LKG படத்தில் RJ பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் லீட் ரோலில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிரபு இயக்கிய இப்படம் சுமார் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால் இந்த பாக்ஸ் ஆபிஸில் ரூ.15 கோடியை வசூல் செய்தது. பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட 5 மடங்கு லாபம் ஈட்டிய படமாக இந்த படம் அமைந்தது.. 

311
Low Budget Tamil Movies Which Turned Superhit

Low Budget Tamil Movies Which Turned Superhit

பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவானது. விஷால், அர்ஜுன் சர்ஜாமற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரூ.14 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.60 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

411
Kolamavu kokila

Kolamavu kokila

நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்த கோலமாவு கோகிலா. இந்த படம் நெல்சன் திலீப்குமார் இயக்கிய முதல் படமாகும். க்ரைம் த்ரில்லர் படமாக உருவான இந்த படம் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 43 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

511
96 Movie

96 Movie

சி பிரேம்குமார் இயக்கத்தில் உருவான 96′ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கிளாகிக் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. ரூ. 18 கோடி பட்ஜெட்டில் யாரிக்கப்பட்ட இந்த படம் ரூ 55 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியேட்டரில் குறைந்தது எத்தனை பேர் இருந்தால் படம் திரையிடப்படும்?... ஆளே இல்லாமல் கூட படம் ஓட்டப்படுமா?

611
Ratchasan

Ratchasan

ராம் குமார் இயக்கத்தில் உருவான ராட்சசன் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ 20 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 

711
Kakka muttai

Kakka muttai

மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை 1 கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் 10 கோடி வசூலித்தது. ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் பல திரைப்பட விருதுகளை கூட வாங்கியுள்ளது.

811
Maanagaram

Maanagaram

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவான படம் மாநகரம். இது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் படமாகும். சந்தீப் கிஷன், ரெஜினா கசாண்ட்ரா, ஸ்ரீ, சார்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

911
Demonte Colony

Demonte Colony

ஆர் அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான படம் டிமாண்டே காலனி. அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த் ஷெட்டி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரூ.2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.11 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

 

1011
Peranbu

Peranbu

மம்முட்டி, அஞ்சலி, பேபி சாதனா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த பேரன்பு ஒரு உணர்வுபூர்வமான குடும்பப் படம். ராம் இயக்கிய இப்படம் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.35 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

விஜய், ரஜினி, கமலையே ஓடவிட்டவர்... சிறுத்தை சிவாவின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவங்கள் ஒரு பார்வை

1111
Kaithi

Kaithi

கைதி 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படத்தில் கார்த்தி, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.106 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved