- Home
- Cinema
- Manorama : கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி... கோலிவுட்டின் அபூர்வ நடிகை ‘ஆச்சி’ மனோரமா பிறந்தநாள் இன்று
Manorama : கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி... கோலிவுட்டின் அபூர்வ நடிகை ‘ஆச்சி’ மனோரமா பிறந்தநாள் இன்று
நகைச்சுவை, குணச்சித்திரம், பாடல் என அனைத்து துறைகளிலும் கலக்கியவர் நடிகை மனோரமா, காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு அவரது படத்தின் கதாப்பாத்திரங்கள் என்னெறும் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

<p>Manorama</p>
மறக்க முடியாத திரைக்கலைஞர்
நகைச்சுவைப் பாத்திரங்கள் மட்டுமன்றி குணச்சித்திரப் பாத்திரங்களிலும் கோலோச்சியவர் மனோரமா.. பல்வேறு இசையமைப்பாளர் இசையில் வெவ்வேறு ரகமாகப் பாடியும் சிறப்புச் சேர்த்துள்ள ஒரு முழுமையான கலைஞர் மனோரமா. திரைத்துறையில் கலக்கிய மனோரமாவின் பிறந்தநாள் இன்று..
திரைத்துறையில் அடியெடுத்து வைத்த மனோரமா
காசிகிளக்குடையார் ராமாமிர்தம்மாள் தம்பதியருக்கு 1939-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில் மனோரமா பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர் கோவிந்தம்மாள்.
நாடகமும்- திரைத்துறையும்
குடும்பச் சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது. மனோரமா, ‘யார் மகன்’என்ற நாடகம் தான் இவருடைய முதல் நாடகம்,
அறிஞர் அண்ணா எழுதிய ‘வேலைக்காரி’ நாடகத்திலும், அவரோடு ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’, ‘ஓர் இரவு’ நாடகங்களிலும் நடித்திருக்கிறார். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார். இதன் தொடர்ந்து 1958ல் "மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.
காமெடி ரோலில் கலக்கிய மனோரமா
கவிஞர் கண்ணதாசன்தான் இவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார். முதல் படமே காமெடி ரோலில் கலக்கினார். அந்த காலக்கட்டத்தில் நகைச்சுவை நடிகர் நாகேசுடன் மனோரமா தோன்றினார் தியேட்டரை சிரிப்பலையில் மூழ்கி கிடக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
<p>Manorama</p>
ஜில்,ஜில் ரமாமணி
தில்லானா மோகனம்பாள் படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்த "ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டர் அந்த காலத்திலேயே மிக பிரபலமாக இருந்தது. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் மனோரமா நடித்த கண்ணம்மா என்ற பாத்திரத்தின் பெயர் இது. கேட்டவுடனேயே ‘நீ கம்முனு கெட’ என்கிற வசனம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆயிக்கணக்கான படங்களில் நடித்தாலும் மனோரமாவின் படங்களில் மறக்க முடியாதது இந்த கண்ணம்மா கேரக்டர்தான்.
திரையுலகில் அசைக்க முடியாத ஆளுமை
தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் 'ஆச்சி' என அழைக்கப்பட்ட மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனை படைத்த காலத்தால் அழித்துவிட முடியாத புகழைப் பெற்ற ஒரு நடிகை. மிகச்சிறந்த நடிப்பாற்றல், தெளிவான வசன உச்சரிப்பு, கணீர் குரலில் பாட்டு என அவரது பன்முகத்திறமைகள் அவரை சுமார் அரை நூற்றாண்டுகாலம் திரையுலகில் அசைக்க முடியாத ஆளுமையாக வைத்திருந்தது.
மறைந்தாலும் மறக்க முடியாத மனோரமா
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் மனோரமா. காலத்தால் அழிக்க முடியாத அன்புக்குரிய ஆச்சியாக வலம் வந்த மனோரமா 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று மறைந்தார். மனோரமா மறைந்தாலும் அவரது நடிப்பு மக்களால் என்றென்றும் மறக்க முடியாது.