- Home
- Cinema
- என்ன போட்டு அடி அடினு அடிக்கிறான்; என்னால முடியல... பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மீது டிக்டாக் இலக்கியா புகார்
என்ன போட்டு அடி அடினு அடிக்கிறான்; என்னால முடியல... பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மீது டிக்டாக் இலக்கியா புகார்
டிக்டாக் மூலம் பேமஸ் ஆன இலக்கியா, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது பரபரப்பு புகார் கூறி இருப்பது இணையத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.

Tik Tok Elakkiya Shocking Complaint
தமிழ் திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர் சூப்பர் சுப்பராயன். இவரின் மகனான திலீப் சுப்பராயனும் தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் முதன்முதலில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய படம் ஆரண்ய காண்டம். அப்படத்தில் இவர் அமைத்திருந்த ஸ்டண்ட் காட்சிகள் கவனம் ஈர்த்தன. பின்னர் புஷ்கர் காயத்ரி இயக்கிய ஓரம் போ திரைப்படத்தில் பணியாற்றினார். அப்படத்தில் ஆர்யா நடித்த ஆட்டோ ரேஸ் எல்லாம் தத்ரூபமாக திரையில் வந்ததற்கு திலீப் சுப்பராயனும் ஒரு காரணம். பின்னர் அட்டக்கத்தி, சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், போன்ற வெற்றிப்படங்களிலும் ஸ்டண்ட் மாஸ்டராக பாணியாற்றினார்.
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்
விஜய்யின் ஜில்லா, புலி, தெறி, வாரிசு, கோட், அஜித்தின் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, சூர்யாவின் காப்பான், கார்த்தி நடித்த தீரன், கடைக்குட்டி சிங்கம், தனுஷின் வட சென்னை என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார் திலீப் சுப்பராயன். இவர் ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் களமிறங்கி இருக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த அஞ்சல படம் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த திலீப், 2017-ல் ரிலீஸ் ஆன சங்கு சக்கரம் படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார். இவர் ஏராளமான விருதுகளையும் வென்றிருக்கிறார்.
டிக் டாக் இலக்கியா புகார்
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் திலீப் தான். தென்னிந்திய அளவில் பாப்புலராக இருக்கும் திலீப் சுப்பராயன் மீது இன்ஸ்டா பிரபலம் டிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார் ஒன்றை கூறி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திலீப் சுப்புராயன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறி இன்ஸ்டா ஸ்டோரியில் டிக் டாக் இலக்கியா பதிவிட்டுள்ளதால் இது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருகிறது.
வைரலாகும் இலக்கியாவின் இன்ஸ்டா ஸ்டோரி
இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா பதிவிட்டுள்ளதாவது : “என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான் என தன் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் திலீப் சுப்பராயனின் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது.