14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிக் டாக் பிரபலம் கைது!
சகோதரன் என்று நினைத்து பழகிய சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து, கர்பமாக்கிய டிக் டாக் பிரபலத்தை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தின் கோத்தவாலாசா பகுதியைச் சேர்ந்தவர் பார்கவ். டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமானவர். அதை தொடர்ந்து, சில காலமாக சமூக ஊடகத்தில், 'ஃபன் பக்கெட்' என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
இவருக்கு விசாகப்பட்டினம் மாவட்டத்தின் சினகிரி காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அறிமுகமாகியுள்ளார். விசாகப்பட்டினத்தில் உள்ள சினகிரி காலனியில், தான் பார்காவ் வசித்து வருகிறார். சிறுமியும் சகோதரன் என்கிற முறையோடு பழகியுள்ளார். அதனால் சிறுமியின் தாயாரும்... அண்ணன் - தங்கையாக தானே பழகுகிறார்கள் என பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் சமீப காலமாக, அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த அந்த மருத்துவர், நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். பின்னர் இந்த கர்ப்பத்திற்கு காரணம் யார் என்று விசாரித்த போது, பார்கவ் என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் 16 ஆம் தேதி, சிறுமியின் தாய் பெண்டூர்த்தியில் உள்ள காவல் நிலையத்தில் பார்கவ் மீது புகார் கொடுத்தார். பின்னர் விசாகப்பட்டினம், ஏ.சி.பி பிரேம் காஜலின் உத்தரவின் பேரில் போலீசார் பார்கவ்வை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.