ட்ரோல்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?... விஜய் பாணியில் குட்டி ஸ்டோரியுடன் அஜித் கொடுத்த ‘நச்’ விளக்கம்
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித்திடம் நடத்திய உரையாடல் குறித்து அவருடன் பைக் ட்ரிப் சென்றுள்ள அவரது நண்பர் உதயகுமார் என்பவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், பட புரமோஷன்களில் கலந்துகொள்ளமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதுகூட அவர் நடித்து முடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் வேலைகள் ஒருபக்கம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் அஜித் தனது நண்பர்களுடன் ஜாலியாக பைக் ரைடு சென்றுவிட்டார். அவரது பைக் ட்ரிப்பின் போது எடுத்த புகைப்படங்களை அவரது நண்பர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித்திடம் நடத்திய உரையாடல் குறித்து அவருடன் பைக் ட்ரிப் சென்றுள்ள அவரது நண்பர் உதயகுமார் என்பவர் பதிவிட்டுள்ளார். அதன்படி எதிர்மறையான விமர்சனங்கள், வெறுப்பூட்டும் செய்திகள், ட்ரோல்கள், எதிர்மறையான மீம்ஸ்கள் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்று ஏகேவிடம் அவர் கேட்டாராம்.
இதையும் படியுங்கள்... அட.. துணிவு படத்துல இந்த பிக்பாஸ் சீசன் 6 பிரபலமும் நடிச்சிருக்காராம்பா- எச்.வினோத் வெளியிட்ட வேறலெவல் அப்டேட்
இதற்கு குட்டி ஸ்டோரியுடன் அஜித் அளித்த பதில், "இத்தகைய செயல்களை நிறுத்துமாறு சொல்வது, இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வதை நிறுத்துமாறு கசாப்புக் கடைக்காரரிடம் கோரிக்கை வைப்பதைப் போன்றது. அப்படி அவரிடம் சொன்னால், அவர், அசைவைப் பிரியர்களும் இங்கே இருக்கிறார்கள், அதற்கு சந்தை இருக்கிறது என்று நிச்சயமாகப் பதிலளிப்பார்.
அப்படி அவர் அதை செய்யாமல் விட்டுவிட்டால், நிச்சயம் வேறு யாராவது ஒருவர் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அவ்வாறு செய்வார். அதேபோல் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அத்தகைய ட்ரோல்களையும், எதிர்மறை விமர்சனங்களையும் விரும்புகிறார்கள். மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்காத வரையில் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்” என அஜித் கூறினாராம். இதைக் கேட்டதும் நல்லவேளை நான் பிரபலமாக இல்லை என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன் என அஜித்தின் நண்பர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு... விஜய் சேதுபதி, சாய் பல்லவி உள்பட விருது வென்றவர்களின் முழு விவரம் இதோ