ஜனநாயகனுக்கு ஆப்பு வைத்த அந்த இரண்டு காட்சிகள்..! தானே வழிய சென்று மாட்டிக்கொண்ட விஜய்..!
ஜனநாயகன் திரைப்படத்தில் படத்தில் ‘ஆபரேஷன் ஓம்’ என காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அது இந்துக்களின் உணர்களை புண்படுத்துகிறது.

ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள், அரசியல் தலையீடுகள் குறித்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தேர்வு குழுவில் உள்ள ஒரே ஒரு உறுப்பினர் எழுப்பிய எதிர்ப்பின் காரணமாகவே படத்தின் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர் தனது ஆட்சேபனைகள் பதிவு செய்யப்படவில்லை என்று புகார் அளித்ததன் அடிப்படையில், சான்றிதழ் வழங்கும் செயல்முறை நிறுத்தப்பட்டு மறுஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சென்சார் போர்டு பிடிவாதம்
ஜனநாயகன் பட வேலைகளை முடிச்சு சென்சாருக்கு போன மாசமே அனுப்பி இருந்தார்கள். படத்தை சென்சார் குழு உறுப்பினர்களும் பார்த்து விட்டு சில திருத்தங்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்போதே U/A கொடுக்கிறோம் என சென்சார் போர்டுலும் சொல்லி இருக்கிறார்கள். இதையும் நம்பி திருத்தங்கள் செய்து சென்சாருக்கு திரும்பவும் அனுப்பி வைத்துள்ளது ஜனநாயகன் டீம். ஆனால் சென்சார் சட்டிபிடிகேட் வரவில்லை. ஜனநாயகன் டீம் தரப்பில் விசாரித்தபோது சரியான பதில் வரவில்லை என நீதிமன்றம் சென்றுள்ளனர்.
நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், மத உணர்வுகளை புண்படுத்துகிற காட்சிகள் இருக்கிறது என சென்சார் போர்டு உறுப்பினரே புகார் கொடுத்திருக்கிறார்கள். அதனால் மறுபடியும் தணிக்கை செய்ய மும்பைக்கு அனுப்பி விட்டோம் என மத்திய அரசு தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். இந்த வழக்கில் பட ரிலீஸ் அறிவித்த ஜனவரி 9-ல்தான் தீர்ப்பு என உயர்நீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகள்
இந்நிலையில், தணிக்கை சான்றிதழ் பிரச்சனை உருவானது எப்படி என்பது தொடர்பாக ஒரு புதிய தகவல்கள் உலா வருகிறது. விஜய் திரைப்படம் என்றாலே ஒரு புதிய சிக்கல் ஏற்படுவதாக சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் விஜய். அவர் பேசியது போலவே ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையாகி இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் படத்தில் ‘ஆபரேஷன் ஓம்’ என காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அது இந்துக்களின் உணர்களை புண்படுத்துகிறது.
அடுத்து காவல்துறையின் தலைமை அலுவலகமான ஐஜி அலுவலகத்தில் குண்டு வைப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு படை சார்ந்த சின்னங்களை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னை, பனையூர் அருகே பூஞ்சேரி என்ற இடத்தில் 100 பேருடன் சண்டைக் காட்சியும் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பாதுகாப்பு படை சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற தூண்டுதல் போல இருப்பதாகவும், இது மக்களிடையே ஒரு தூண்டுதலாகவும், வரக்கூடிய சமுதாயத்தினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற அடிப்படையில் இந்த தணிக்கை சான்றிதழ் தரமால் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தானே சென்று சிக்கிக் கொண்ட விஜய்
விஜய் படம் என்றால் ஆதிகாலம் தொட்டே ரிலீஸ் சமயத்தில் எதிர்ப்புகளும் பிரச்சினைகளும் எழுந்து வருவது தொடர்கதையாக உள்ளது. அரசியலில் அவர் களமிறங்கிய பின் இன்னும் எதிர்ப்புகள் அதிகமாகும் என்பது சாதாரண மக்களுக்கே தெரிந்ததுதான். அதுவும் கடைசி படமான, அரசியலை மையப்படுத்திய படமாக இருக்கிறது ஜனநாயகன். அப்படிப்பட்ட நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் காட்சிகள் வைத்தால் சிக்கல் எழலாம் என்பதை விஜயும், படக்குழுவும் எப்படி கண்டுகொள்ளாமல் போனார்கள்? என்கிற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் 9ம் தேதி ரிலீஸாவதில் மேலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் ‘ஜனநாயகன்’, இந்தியாவில்தான் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களிலும், மற்ற வெளிநாடுகளிலும் குறிப்பிட்ட சமயத்தில் வெளியாவதில் சிக்கல் இல்லை. ஏற்கனவே அமெரிக்காவில் 28,000 டிக்கெட்டுகளை விற்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
