MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijay : ஜிம் முதல் தியேட்டர் வரை... சகல வசதியும் இருக்கு! நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?

Vijay : ஜிம் முதல் தியேட்டர் வரை... சகல வசதியும் இருக்கு! நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?

Vijay Neelankarai House : தமிழக முதல்வர் விஜய், சென்னை நீலாங்கரையில் பிரம்மாண்ட வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 22 2026, 08:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay House
Image Credit : X

Vijay House

தமிழ் சினிமாவில் ஏற்ற இறக்கங்களை கடந்து, இன்று மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறார் விஜய். குழந்தை நட்சத்திரமாக வெள்ளிதிரையில் அடியெடுத்து வைத்த இவர், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு மெர்சல், பிகில், வாரிசு, லியோ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழகம் தாண்டி கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என தென்னிந்தியா முழுவதும் தன் ரசிகர் வட்டத்தை விரிவுபடுத்தினார் விஜய். சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த விஜய், தற்போது அதிலிருந்து முற்றிலுமாக விலகி இருக்கிறார்.

அவரின் முழு கவனமும் தற்போது அரசியலில் தான் உள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். தற்போது விஜய்யின் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார் விஜய்.

Vijay : லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை; தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விஜய்யின் நீலாங்கரை வீடு
Image Credit : our own

விஜய்யின் நீலாங்கரை வீடு

முதல்வர் விஜய், நீலாங்கரை கடற்கரை அருகே பிரம்மாண்ட வீடு கட்டி அதில் வசித்து வருகிறார். அந்த வீட்டை பற்றிய தகவல்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் அந்த வீட்டை ஒரு ஹாலிவுட் நடிகரின் வீட்டை போல் கட்டி இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அது தான் உண்மையும் கூட. சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் அமெரிக்கா சென்றிருந்தபோது, ஹாலிவுட் நட்சத்திரம் டாம் குரூஸின் பீச் ஹவுஸ் ஒன்றை கண்டு வியந்துபோனாராம். அதே வடிவமைப்பில் தன் இல்லத்தை அமைக்க முடிவு செய்த அவர். இதற்காக முன்பிருந்த கட்டிடத்தை இடித்து, புதிய வடிவில் கட்டினாராம்.

Related Articles

Related image1
Vijay : லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை; தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ
Related image2
Vijay : மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்கும் முதல்வர் விஜய்-யின் சொத்து மதிப்பு எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க...!
34
விஜய் வீட்டில் இத்தனை வசதிகளா?
Image Credit : our own

விஜய் வீட்டில் இத்தனை வசதிகளா?

இந்த மாளிகையில் கதவுகள் முதல் விளக்குகள் வரை அனைத்தும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்குகின்றன. உள்ளே நுழைய பயோமெட்ரிக் அனுமதி கட்டாயம். விருந்தினர்களுக்காக தனி தங்கும் அறைகளும் உண்டு. அதுமட்டுமல்ல, மகள் ஷாஷாவிற்காக வீட்டுக்குள்ளேயே ஒரு பேட்மிண்டன் மைதானமும் அமைத்திருக்கிறார் தளபதி. மகன் சினிமாவில் ஆர்வமாக இருப்பதால் அவருக்காக வீட்டிற்குள் ஒரு மினி தியேட்டரும் வைத்து கட்டியிருக்கிறாராம் விஜய். அதேபோல் வீட்டிலேயே ஒர்க் அவுட் செய்ய தனி ஜிம்மும் இருக்கிறதாம். தற்போது இந்த கனவு மாளிகையின் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய வீட்டை தன்னுடைய மனைவி, பிள்ளைகளுக்காக ஆசை ஆசையாய் கட்டிய விஜய், தற்போது அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

44
தனியாக வசிக்கும் விஜய்
Image Credit : Asianet News

தனியாக வசிக்கும் விஜய்

நடிகர் விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் தற்போது தனியாக வசித்து வருகிறார்கள். விஜய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி சங்கீதா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவருடன் தான் அவரது மகளும் இருக்கிறார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராகிவிட்டதால், அவரும் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். அதனால் விஜய் மட்டுமே தற்போது நீலாங்கரை வீட்டில் தனியாக வசிக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay : லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை; தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ
Recommended image2
Vijay : மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்கும் முதல்வர் விஜய்-யின் சொத்து மதிப்பு எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க...!
Recommended image3
Best Cinema Fathers : தமிழ் சினிமாவின் டாப் 10 அப்பாக்கள் யார்? யார்? | Father's Day Special
Related Stories
Recommended image1
Vijay : லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை; தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ
Recommended image2
Vijay : மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்கும் முதல்வர் விஜய்-யின் சொத்து மதிப்பு எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved