MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜெய்பீம் படத்தை அடுத்து மாநாடுக்கு வந்த சிக்கல்! இந்து-முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைப்பதாக குற்றச்சாட்டு!

ஜெய்பீம் படத்தை அடுத்து மாநாடுக்கு வந்த சிக்கல்! இந்து-முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைப்பதாக குற்றச்சாட்டு!

நடிகர் சூர்யா நடித்து, தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் வெளியான, 'ஜெய்பீம்' திரைப்படம் குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் மோசமானவர்கள் என்று சித்தரித்ததற்காக மிகப்பெரிய பிரச்னையை எழுப்பிய நிலையில், தற்போது 'மாநாடு' படத்திற்கும் புது பிரச்சனை வந்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 27 2021, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாத நாயகனாக அறியப்படும், சிம்பு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த 'மாநாடு' திரைப்படம் 'அண்ணாத்த' ரிலீஸ் காரணமாக,  நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இந்நிலையில் இந்த படத்தை வெளியிட பல்வேறு தடைகள் இருந்தது, கடைசி நேரத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர், பிரச்சனைகள் சுமூகமாக முடிக்கப்பட்டு வெளியானது.

 

35

'விண்ணை தாண்டி வருவாயா' படத்திற்கு பின்னர், சும்மார் 11 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள 'மாநாடு' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியில் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வசூலிலும் கெத்து காட்டி வரும் நிலையில், திடீர் என இந்த படத்திற்கு எதிராக புதிய சிக்கலும் வந்துள்ளது.

 

45

அதாவது, மாநில பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்கள்...  “மாநாடு படம் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக அமைந்துள்ளது என்றும்,  பட விவகாரத்தில் முதலமைச்சர் தலையீடு செய்ய வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும்” என பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

 

55

ஜெய்பீம் படத்தை தொடர்ந்து 'மாநாடு' படத்திற்கும் தற்போது புதிய சிக்கல் உருவாகியுள்ளது, சிம்பு ரசிகர்கள் மத்தியிலும் படக்குழுவினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved