MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • The Paradise Day 1 Box Office : ‘தி பாரடைஸ்’ பாக்ஸ் ஆபிஸில் கலெக்‌ஷன் அள்ளியதா? காத்துவாங்கியதா? முதல் நாள் வசூல் நிலவரம் இதோ

The Paradise Day 1 Box Office : ‘தி பாரடைஸ்’ பாக்ஸ் ஆபிஸில் கலெக்‌ஷன் அள்ளியதா? காத்துவாங்கியதா? முதல் நாள் வசூல் நிலவரம் இதோ

The Paradise Day 1 Box Office : ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடித்த தி பாரடைஸ் திரைப்படம் தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அதன் முதல் நாள் வசூல் நிலவரம் எப்படி இருக்கு என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 25 2026, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தி பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல்
Image Credit : X

தி பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல்

நடிகர் நானி இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், முழுக்க முழுக்க மாஸ் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’. ‘தசரா’ படத்தின் மூலம் இணைந்த இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - நானி கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளது. வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியான இப்படத்திற்கு முதல் நாளிலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘தி பாரடைஸ்’ படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். இவர்களுடன் மோகன் பாபு, சம்பூர்ணேஷ் பாபு, பாலிவுட் நடிகர் ராகவ், சோனாலி குல்கர்னி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இந்தப் படம், வெளியீட்டுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங்கில் கவனம் ஈர்த்தது.

The Paradise Review: நானி கோட்டையை பிடித்தாரா? கோட்டைவிட்டாரா? 'தி பாரடைஸ்' விமர்சனம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதல் நாளே ரூ.74.90 கோடி வசூல்?
Image Credit : X

முதல் நாளே ரூ.74.90 கோடி வசூல்?

படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன. உலகளவில் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.74.90 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் ரூ.54.90 கோடி வசூலித்துள்ளதாக சாக்னில்க் தரவுகள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு சந்தையிலும் நானியின் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அட்வான்ஸ் புக்கிங் மற்றும் முதல் நாள் வசூலை சேர்த்து ஓவர்சீஸ் மார்க்கெட்டில் சுமார் ரூ.20 கோடி வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நானியின் திரையுலக பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஓப்பனிங்கை ‘தி பாரடைஸ்’ பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு நானி நடிப்பில் வெளியான ‘ஹிட் 3’ திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ.40 கோடி வசூல் செய்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பாரடைஸ் முறியடித்துள்ளது. இதுதவிர ‘சரிபோதா சனிவாரம்’ ரூ.25 கோடியும், நானி - ஸ்ரீகாந்த் ஓடேலா கூட்டணியில் உருவான ‘தசரா’ திரைப்படம் ரூ.38 கோடியும் முதல் நாள் வசூலாக பெற்றிருந்தன.

34
படத்திற்கு கலவையான விமர்சனங்கள்
Image Credit : YouTube

படத்திற்கு கலவையான விமர்சனங்கள்

வசூலில் மிகப்பெரிய தொடக்கத்தை பெற்றிருந்தாலும், ‘தி பாரடைஸ்’ திரைப்படத்திற்கு விமர்சனங்கள் கலவையாகவே இருக்கின்றன. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், நானியின் மாறுபட்ட நடிப்பு, ரா மற்றும் ரஸ்டிக் மேக்கிங், பின்னணி இசை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகின்றன.

தெலங்கானா பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நானி தனது கதாபாத்திரத்தை மிகவும் தீவிரமாக வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கேசிஆரை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள ஒரு கதாபாத்திரமும் படத்தின் ஹாட் டாப்பிக் ஆக மாறியுள்ளது.

அதே நேரத்தில், கதையில் போதிய தெளிவு இல்லை, திரைக்கதை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம், சில காட்சிகளில் உணர்வுபூர்வமான இணைப்பு குறைவாக உள்ளது போன்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன. படத்தைப் பற்றிய ட்ரோல்களும் ஒரு பக்கம் அதிகரித்துள்ளன.

44
ரூ.150 கோடி பட்ஜெட்.. ரூ.200 கோடி வசூல் இலக்கு
Image Credit : X

ரூ.150 கோடி பட்ஜெட்.. ரூ.200 கோடி வசூல் இலக்கு

‘தி பாரடைஸ்’ படத்தின் தயாரிப்பு மற்றும் புரமோஷன் செலவுகள் உட்பட மொத்த பட்ஜெட் சுமார் ரூ.150 கோடி என கூறப்படுகிறது. படத்தின் தியேட்டர் அல்லாத உரிமைகள் மூலமாகவே ரூ.80 முதல் ரூ.100 கோடி வரை வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி உரிமை சுமார் ரூ.50 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.15 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, சாட்டிலைட் உரிமமும் நல்ல தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தியேட்டர் உரிமையை பொறுத்தவரை, மொத்தமாக சுமார் ரூ.96 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் நாளில் கிடைத்துள்ள இந்த வேகத்தை அடுத்தடுத்த நாட்களிலும் படம் தக்க வைத்துக்கொள்ளுமா என்பதே தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வார இறுதி வசூல் எப்படி அமைகிறது என்பதை பொறுத்தே ‘தி பாரடைஸ்’ படத்தின் அடுத்தகட்ட பாக்ஸ் ஆபிஸ் பயணம் அமையும்.

The Paradise Movie First Review : நானியின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? 'தி பாரடைஸ்' முதல் விமர்சனம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dorothy Movie Review: சனந்த் - ரிஷிகாந்த் அசாத்திய நடிப்பு... இளையராஜா இசை ட்ரீட்: மிரட்டியதா 'டோரதி'?
Recommended image2
Meesaya Murukku-2 Review: 3 வேடங்களில் மிரட்டிய ஆதி... முதல் பாதி ஜென் ஸி, 2-ம் பாதி ஃபுல் எனர்ஜி; 'மீசைய முறுக்கு-2' எப்படி இருக்கு?
Recommended image3
Lenin Pandiyan Review : சிவாஜி பேரன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? லெனின் பாண்டியன் விமர்சனம்
Related Stories
Recommended image1
The Paradise Review: நானி கோட்டையை பிடித்தாரா? கோட்டைவிட்டாரா? 'தி பாரடைஸ்' விமர்சனம்!
Recommended image2
The Paradise Movie First Review : நானியின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? 'தி பாரடைஸ்' முதல் விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved