MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • The Paradise Review: நானி கோட்டையை பிடித்தாரா? கோட்டைவிட்டாரா? 'தி பாரடைஸ்' விமர்சனம்!

The Paradise Review: நானி கோட்டையை பிடித்தாரா? கோட்டைவிட்டாரா? 'தி பாரடைஸ்' விமர்சனம்!

The Paradise Movie Review : ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி, கயாடு லோஹர், மோகன்பாபு நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகி உள்ள பாரடைஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

5 Min read
Author : Ganesh A
Published : Sep 24 2026, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
The Paradise Movie Review in Tamil
Image Credit : X

The Paradise Movie Review in Tamil

நானி, ஸ்ரீகாந்த் ஓடேலா கூட்டணியில வந்திருக்க படம்தான் 'தி பாரடைஸ்'. 'தசரா' படத்துக்குப் பிறகு இவங்க ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்திருக்காங்க. மோகன் பாபு, ராகவ் ஜுயல் ரெண்டு பேரும் வில்லனா மிரட்டியிருக்காங்க. கயாடு லோஹர் ஹீரோயினா நடிச்சிருக்காங்க. சம்பூர்ணேஷ் பாபு ஒரு முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்கார். எஸ்.எல்.வி சினிமாஸ் பேனர்ல சுதாகர் செருக்குரி இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்கார். டீசர், பாட்டு எல்லாமே படத்து மேல பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குச்சு. ட்ரெய்லர் ரிலீஸ் பண்ணலன்னாலும், படத்துக்கு செம ஹைப் இருந்துச்சு. இன்னைக்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 24) படம் தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆகியிருக்கு. படம் எப்படி இருக்கு? நானிக்கு இன்னொரு பிளாக்பஸ்டர் கிடைக்குமா? ஸ்ரீகாந்த் ஓடேலா மேஜிக் வொர்க் அவுட் ஆச்சா? வில்லனா மோகன் பாபு எப்படி நடிச்சிருக்கார்? வாங்க விமர்சனத்துல பார்க்கலாம்.

The Paradise Movie First Review : நானியின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? 'தி பாரடைஸ்' முதல் விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பாரடைஸ் படத்தின் கதை
Image Credit : X

பாரடைஸ் படத்தின் கதை

பல வருஷங்களுக்கு முன்னாடி 'பாரடைஸ்' பகுதிக்கு சவாரி மக்கள் குடிபெயர்றாங்க. நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சாலும், இவங்களுக்கு கிடைக்கல. இன்னும் அடிமைகளாத்தான் வாழ்றாங்க. அவங்களுக்குன்னு ஒரு அடையாளமே இல்லை. ஷிகாஞ்சி மாலிக் (மோகன் பாபு) குடும்பம் அவங்களை அடிமைகளா நடத்துது. கால் தூசு மாதிரி பார்க்குறாங்க. எதிர்த்து கேள்வி கேட்டா கொடூரமா கொல்றாங்க. அந்த பயத்துலயே யாரும் அவங்களை எதிர்க்கல. ஆனா, சம்மக்கா (சோனாலி குல்கர்னி) தலைமையில சவாரி மக்கள் தங்களோட அடையாளத்துக்காக பல வருஷமா போராடுறாங்க. ஒரு கட்டத்துல சம்மக்காவோட புருஷன் இறந்துட, நிறைமாத கர்ப்பிணியா இருக்குற அவங்க, புருஷன் பொணத்தோட அரசாங்க ஆபீஸ் முன்னாடி போராட்டம் பண்றாங்க. அப்போ அங்க வர்ற மாலிக், அவங்களுக்கு கரண்ட் ஷாக் கொடுக்குறார். அந்த வலியில சம்மக்காவுக்கு இரட்டை குழந்தை பிறக்குது. பொண்ணு இறந்துட, பையன் மட்டும் உயிர் பிழைக்கிறான். அவன்தான் ஜடல் (நானி). பொண்ணு செத்து பையனுக்கு உசுரு கொடுத்ததால, அவனுக்கு சடை வளர்த்து வளர்க்குறாங்க சம்மக்கா. ஆனா, அம்மா செஞ்ச தப்புக்காக ஜடல் அவங்களை வெறுக்கிறான்.

14 வருஷம் ஜெயில்ல இருந்தாலும், வெளிய வந்த பிறகும் அம்மாவை வெறுத்துக்கிட்டே இருக்கான். கலெக்டர் மூலமா அடையாளத்துக்காக போராடும்போது, மாலிக் பையன் (ராகவ்) வந்து ஊர் மக்களை கொடுமைப்படுத்துறான். அம்மாவை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்துறான். அம்மாவைப் பத்தின உண்மைகளை தெரிஞ்சுகிட்ட ஜடல், அவங்களுக்காக என்ன செஞ்சான்? சவாரி மக்களோட அடையாளத்துக்காக எப்படி போராடினான்? அம்மா செஞ்ச தப்பு என்ன? மாலிக் ஏன் ஜடலை அவமானப்படுத்தினான்? சுப்பு (கயாடு லோஹர்) கூட காதல் எப்படி வொர்க் அவுட் ஆச்சு? பிரியாணிக்கும் ஜடல் அவமானத்துக்கும் என்ன சம்பந்தம்? இதுல கே.சி.ஆர், என்.டி.ஆர் கேரக்டர்கள் என்ன பண்ணுது? கடைசியில சவாரி மக்களோட போராட்டம் ஜெயிச்சுதா இல்லையா? இதுதான் படத்தோட கதை.

36
திரைக்கதை எப்படி?
Image Credit : Asianet News

திரைக்கதை எப்படி?

பாரடைஸ் பகுதியில இருக்குற சவாரி மக்கள் தங்களோட அடையாளத்துக்காக பண்ற போராட்டமும், அவங்களோட தலைவன் ஜடல் பண்ற ஆக்‌ஷனும்தான் இந்தப் படம். இது ஒரு கற்பனைக் கதைன்னாலும், சில நிஜ சம்பவங்களை சேர்த்திருக்காங்க. ஒரு பக்கம் சவாரி மக்களோட போராட்டம், இன்னொரு பக்கம் அம்மா - பையன் பாசம்னு கதை நகருது. இதுக்கு நடுவுல ஆக்‌ஷன் தூக்கலா இருக்கு. கூடவே ஒரு லவ் ட்ராக்கும், நிஜ அரசியலை ஞாபகப்படுத்துற சில விஷயங்களும் இருக்கு.

கதையா பார்த்தா இது ரொம்ப ஆழமான சப்ஜெக்ட். ஆனா, அதை ஸ்கிரீன்ல கொண்டு வந்த விதத்துல கொஞ்சம் தடுமாற்றம் தெரியுது. ஆரம்பத்துல ஷிகாஞ்சி மாலிக் கேரக்டர் அறிமுகம், சவாரி மக்கள் வர்றது, 200 வருஷமா அடிமையா இருக்குறதுன்னு எல்லாமே சூப்பரா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்காங்க. இது படத்து மேல ஆர்வத்தை கூட்டுது. சவாரி மக்களோட கஷ்டங்கள், ஜடல் பிறக்குற வரைக்கும் எமோஷனலா கனெக்ட் ஆகுது. ஆனா, அதுக்கப்புறம் அந்த ஆழம் மிஸ் ஆயிடுச்சு. மாலிக் ஜடலை அவமானப்படுத்துறதும், ஜடல் மாலிக் மேல கோபப்படுறதும் ஓரளவுக்கு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. ஆனா, அம்மாவை வெறுக்குறது, சுப்பு கூட லவ் ட்ராக் இதெல்லாம் பெருசா செட் ஆகல. கயாடு லோஹர் கிளாமர் ட்ரீட் கொடுத்திருக்காங்க.

அதுக்கப்புறம் கதை பல கோணங்கள்ல நகருது. ஆனா அம்மா - பையன் எமோஷன் நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்கு. இன்டர்வல் பிளாக் செம மாஸா இருக்கு. ஆனா, செகண்ட் ஹாஃப்ல மாலிக் - ஜடல் சண்டை வெறும் ஆக்‌ஷனா மட்டுமே சுருங்கிடுச்சு. புதுசா வர்ற கே.சி.ஆர் கேரக்டர் சிரிக்க வெச்சாலும், கதையை விட்டு விலகிப் போகுது. செகண்ட் ஹாஃப் ரொம்பவே இழுவை. கிளைமேக்ஸ் முடிவும் ரொம்ப சாதாரணமா இருக்கு.

46
பிளஸ், மைனஸ்
Image Credit : Asianet News

பிளஸ், மைனஸ்

படத்துல ஆக்‌ஷன் சீன்ஸ் சூப்பரா இருக்கு. ஆனா, அதுவே ஓவர் டோஸ் ஆகிடுச்சு. அம்மா - பையன் எமோஷன் சில இடங்கள்ல வொர்க் அவுட் ஆகியிருக்கு. காக்கைக்கும் ஜடலுக்கும் இருக்குற கனெக்‌ஷன் ஓகே. சாமி வந்த மாதிரி ஆடுற ஆக்‌ஷன் சீக்வென்ஸ் மிரட்டல். அனிருத் பிஜிஎம் படத்துக்கு பெரிய பிளஸ். சில ஆக்‌ஷன் சீன்ஸ் மாஸ் ஆடியன்ஸுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும். இன்டர்வல் பேங் சூப்பர். செகண்ட் ஹாஃப்ல கே.சி.ஆர் எபிசோட் நல்லா இருக்கு. இப்படி அங்கங்க சில விஷயங்கள் நல்லா இருக்கு. மோகன் பாபு கேரக்டர் ஸ்ட்ராங்கா இருக்கு. ஆனா, கிளைமேக்ஸ் சொதப்பல்.

நானி கேரக்டர் படத்துக்கு ஹைலைட், அதே சமயம் மைனஸும் கூட. ஏன்னா, இது ரொம்ப ஹெவியான ஆக்‌ஷன் கதை. நானி இதுக்கு செட் ஆகலையோன்னு தோணுது. படத்துல லாஜிக் நிறைய இடங்கள்ல மிஸ் ஆகுது. எமோஷன்ஸ் பெருசா கனெக்ட் ஆகல. செகண்ட் ஹாஃப்பை கொஞ்சம் ட்ரிம் பண்ணியிருக்கலாம்.

கற்பனைக் கதையை நிஜ அரசியலோட லிங்க் பண்ணது சரியா வொர்க் அவுட் ஆகல. சங்கர் கேரக்டர் மூலமா கே.சி.ஆரை காட்டுறாங்க. என்.டி.ஆரை பாசிட்டிவா காட்டுறாங்க. இதனால சவாரி மக்களோட கதை ஓரங்கட்டப்பட்டு, கே.சி.ஆர், என்.டி.ஆர் தான் அவங்களுக்கு வாழ்க்கை கொடுத்தாங்கன்னு சொல்ற மாதிரி ஆகிடுச்சு. மொத்தத்துல எமோஷன், லாஜிக் இல்லாத ஒரு மாஸ் ஆக்‌ஷன் டிராமா இந்த பாரடைஸ்.

56
நடிப்பு எப்படி?
Image Credit : Asianet News

நடிப்பு எப்படி?

ஜடல் கேரக்டர்ல நானி பின்னி பெடலெடுத்திருக்கார். படத்துக்காக அவர் போட்ட உழைப்பு ஸ்கிரீன்ல நல்லாவே தெரியுது. எமோஷனல் சீன்ஸ்ல செட்டிலா நடிச்சு ஸ்கோர் பண்றார். ஆக்‌ஷன் சீன்ஸ்ல மனுஷன் வெறித்தனமா இறங்கி அடிச்சிருக்கார். நானியோட கெரியர் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்னு இதைச் சொல்லலாம். ஆனா, இந்தக் கதைக்கு நானி செட் ஆகலையோன்னு ஒரு ஃபீல் வருது.

ஷிகாஞ்சி மாலிக் கேரக்டர்ல மோகன் பாபுவை இதுவரைக்கும் பார்க்காத ஒரு புது அவதாரத்துல பார்க்கலாம். வில்லனா மிரட்டியிருக்கார் கலெக்‌ஷன் கிங். அந்த கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு. ஆனா, முடிவுதான் சரியில்ல. அவர் பையனா ராகவ் இருக்குற வரைக்கும் நல்லா பண்ணியிருக்கார். அம்மாவா சோனாலி குல்கர்னி சூப்பர். ஈஸ்வரி ராவ் கேரக்டரும் நல்லா இருக்கு. சம்பூர்ணேஷ் பாபுவுக்கு ஒரு நல்ல ரோல், அவரும் சிறப்பா செஞ்சிருக்கார். சுப்பு கேரக்டர்ல கயாடு லோஹர் சர்ப்ரைஸ் பண்றாங்க. சத்யராஜ் கேரக்டர் கொஞ்ச நேரம் வந்தாலும் கலகலப்பா இருக்கு. மத்தபடி எல்லாரும் ஓகே.

66
டெக்னிக்கல் விஷயங்கள்
Image Credit : Asianet News

டெக்னிக்கல் விஷயங்கள்

டெக்னிக்கலா படம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. சி.ஹெச். சாய் ஒளிப்பதிவு சூப்பர். புதுசாவும், கண்ணுக்கு குளிர்ச்சியாவும் இருக்கு. நவீன் நூலி எடிட்டிங்ல நிறைய குறைகள் இருக்கு. செகண்ட் ஹாஃப்பை இன்னும் கொஞ்சம் கட் பண்ணியிருக்கலாம். அனிருத் ரவிச்சந்தர் மியூசிக் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கு. பாட்டு, பிஜிஎம் எல்லாமே தெறிக்க விடுது. ஆனா, எமோஷன்ஸ் மிஸ் ஆனதால பிஜிஎம்மும் சில இடங்கள்ல வீணான மாதிரி தோணுது. தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி செலவு பண்ண தயங்கல. ஆனா, அந்த செலவு நிறைய இடங்கள்ல வீணாகிடுச்சு.

டைரக்டர் ஸ்ரீகாந்த் ஓடேலா ஒரு ஸ்ட்ராங்கான கதையை சொல்ல நினைச்சிருக்கார். ஆரம்பமும் முடிவும் ஓகே. ஆனா, நடுவுல கதை தடம் மாறிடுச்சு. லவ் ட்ராக் செட் ஆகல. லாஜிக் மீறல்கள் நிறைய இருக்கு. படத்துக்காக எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. ஆனா, அது ஆடியன்ஸோட எமோஷனலா கனெக்ட் ஆனா மட்டும்தான் அந்த கஷ்டத்துக்கு பலன் கிடைக்கும். அந்த விஷயத்துல இந்தப் படம் சறுக்கிடுச்சு. டைரக்டர் இன்னும் தெளிவா திரைக்கதை அமைச்சிருக்கலாம். அரசியலை உள்ள கொண்டு வந்து கதையோட நோக்கத்தையே மாத்திட்டாங்க. ஆக்‌ஷன்ல காட்டுன கவனத்தை எமோஷன்ஸ்ல காட்டியிருந்தா படம் இன்னும் நல்லா வந்திருக்கும். நானியை விட கே.சி.ஆரை ஹீரோவாக்குன படம்தான் இந்த பாரடைஸ்.

கூலி, தக் லைஃப், டாக்ஸிக் வரிசையில்... பாரடைஸ்-னு சொல்லி நரகத்தை காட்டிய நானி; அனிருத் இசையும் சொதப்பலா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விமர்சனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sandakari Review : 7 வருட காத்திருப்புக்கு ஒர்த்தா? ஒர்த் இல்லையா? சண்டக்காரி விமர்சனம்
Recommended image2
The Dark Heaven Movie Review : மரணத்தை முன்கூட்டியே சொல்லும் மர்ம புத்தகம் - தி டார்க் ஹெவன் விமர்சனம்
Recommended image3
Enna Vilai Review : கருணாஸின் என்ன விலை படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
The Dark Heaven Movie Review : மரணத்தை முன்கூட்டியே சொல்லும் மர்ம புத்தகம் - தி டார்க் ஹெவன் விமர்சனம்
Recommended image2
Sandakari Review : 7 வருட காத்திருப்புக்கு ஒர்த்தா? ஒர்த் இல்லையா? சண்டக்காரி விமர்சனம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved