ஐட்டம் டான்ஸ் ஆட... ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி சம்பளம் - லெஜண்ட் பட நடிகைக்கு இவ்ளோ மவுசா!
தி லெஜண்ட் திரைப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஊர்வசி ரவ்துலா, ஐட்டம் டான்ஸ் ஆட ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம்.
பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி ரவ்துலா. இவர் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார். இவர் கடந்தாண்டு லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளிவந்த தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். அப்படத்தில் நடிக்க இவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வரும் ஊர்வசி ரவ்துலா, அவ்வப்போது தெலுங்கு படங்களில் ஐட்டம் டான்ஸும் ஆடி வருகிறார். அந்த வகையில், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஐட்டம் டான்ஸ் ஆட அவர் ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்டுள்ளது தான் பேசு பொருள் ஆகி உள்ளது. தெலுங்கில் பாயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்திற்காக தான் அவர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளாராம்.
இதையும் படியுங்கள்... சாமி முதல் மைனா வரை... சின்னத்திரையில் இன்றைய ஸ்பெஷல் மூவீஸ் என்னென்ன? - முழு லிஸ்ட் இதோ
இப்படத்தில் 3 நிமிட ஐட்டம் சாங் ஒன்று உள்ளதாம். அந்த 3 நிமிட ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆட தான் நடிகை ஊர்வசி ரவ்துலா ரூ.3 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதன்மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஊர்வசி ரவ்துலா உருவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கேட்ட தொகையை கொடுத்து படக்குழுவும் அவரை ஐட்டம் டான்ஸ் ஆட கமிட் செய்துவிட்டதாம்.
நடிகை ஊர்வசி ரவ்துலா தெலுங்கு படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னதாக சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த வால்டர் வீரய்யா மற்றும் அகில் நடித்திருந்த ஏஜெண்ட் ஆகிய திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இந்த படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆட ரூ.2 கோடி சம்பளமாக வாங்கிய ஊர்வசி ரவ்துலா, தற்போது ராம் பொத்தினேனி படத்திற்காக ரூ.1 கோடி கூடுதலாக வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீள... இவ்ளோ ஆபத்தான சிகிச்சையை மேற்கொள்கிறாரா சமந்தா?