MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படம் பார்க்காமலேயே விமர்சிப்பதா... கமல்ஹாசனை வெளுத்துவாங்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குனர்

படம் பார்க்காமலேயே விமர்சிப்பதா... கமல்ஹாசனை வெளுத்துவாங்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குனர்

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த கமல்ஹாசனை அப்படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் வெளுத்துவாங்கி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 31 2023, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆன திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. கடந்த மே 5-ந் தேதி வெளியான இப்படத்திற்கு ரிலீசுக்கு முன்பே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு காரணம் இப்படத்தில் கேரளாவை சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமிய நாடுகளுக்கு வேலைக்காக அழைத்துச் சென்று அங்கு அவர்களை மதமாற்றம் செய்து பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்று இருந்தன.

25

இது உண்மை சம்பவம் என்று குறிப்பிட்டிருந்ததால் தான் இப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ரிலீசுக்கு முன்பே இப்படத்திற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதால் இப்படம் நாடெங்கும் மே 5-ந் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன பின்னர் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதே வேளையில், பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது.

35

இப்படி பல்வேறு எதிர்ப்புகளை கடந்து ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளது. சமீபத்தில் இப்படம் குறித்து கருத்து தெரிவித்திருந்த கமல்ஹாசன், தான் பிரச்சார படங்களுக்கு எதிரானவன் என்றும், தி கேரளா ஸ்டோரி படத்தின் போஸ்டரில் இது உண்மை சம்பவம் என போட்டால் மட்டும் போதாது, நிஜமாகவே அது உண்மை சம்பவமாக இருக்க வேண்டும். அப்படத்தில் இடம்பெற்றுள்ளது உண்மை சம்பவமே இல்லை என்று பரபரப்பு கருத்து தெரிவித்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... அது உண்மை கதையே இல்ல... தி கேரளா ஸ்டோரி படத்தை பொளந்துகட்டிய கமல்ஹாசன்

45

கமல்ஹாசனின் இந்த விமர்சனத்தை பார்த்து கடுப்பான இயக்குனர் சுதிப்தோ சென், இது போன்ற விமர்சனங்களுக்கெல்லாம் நான் பதிலளிப்பதில்லை. முதலில் பதிலளித்து வந்த நான் பின்னர் அதை நிறுத்தியதற்கு காரணம், தி கேரளா ஸ்டோரி படத்தை பிரச்சார படம் என்று சொன்னவர்கள் கூட படம் பார்த்த பின்னர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர். படம் பார்க்காமலேயே அதனை பிரச்சார படம் என்று விமர்சிக்கிறார்கள்.

55

பாஜகவினருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது என்பதற்காக இது அவர்களுடைய படம் என்று அர்த்தமல்ல. உலகளவில் 37 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இப்படம் பிடித்திருக்கிறது. படம் பார்க்காமலே விமர்சிப்பவர்களுக்கு நான் விளக்கம் கொடுப்பதில்லை” என கமல்ஹாசனுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சுதிப்தோ சென்.

இதையும் படியுங்கள்... சர்ச்சைக்கு மத்தியில் 200 கோடி வசூலித்த... 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கணவர் தந்த மலடி பட்டம்... விவாகரத்துக்கு பின் பிறந்த குழந்தை - நடிகை ரேவதியின் கண்ணீர் கதை
Recommended image2
மீம் கிரியேட்டர்களின் கடவுள்.. வடிவேலுவுக்கு ஆடி கார் முதல் BMW கார் வரை.. இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?
Recommended image3
விஜயாவுக்கு விபூதியடித்த நீத்து... மனோஜை ஆள் வைத்து ஏமாற்றிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved