MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தியேட்டரில் கூட்டமில்லை... ஓடிடிக்கு பார்சல் செய்து அனுப்பப்பட்ட கோட் திரைப்படம் - எப்போ ரிலீஸ்?

தியேட்டரில் கூட்டமில்லை... ஓடிடிக்கு பார்சல் செய்து அனுப்பப்பட்ட கோட் திரைப்படம் - எப்போ ரிலீஸ்?

GOAT movie OTT release Date : நடிகர் விஜய் நடிப்பில் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆன கோட் திரைப்படம் விரைவில் ஓடிடிக்கு வருகிறது, அதன் ரிலீஸ் தேதி இணையத்தில் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 24 2024, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
The Greatest of All Time

The Greatest of All Time

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக நடித்த திரைப்படம் கோட். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. கோட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆனது. கோட் படத்துக்கு போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்குகளையும் கோட் திரைப்படம் ஆக்கிரமித்து இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
GOAT Movie

GOAT Movie

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் மகன் விஜய் கதாபாத்திரத்தை டீ ஏஜிங் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கி இருந்தனர். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் பிரசாந்த், லைலா, பிரபுதேவா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், மைக் மோகன், ஜெயராம், கனிகா, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

35
Venkat Prabhu, Vijay

Venkat Prabhu, Vijay

இதுதவிர த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய கோட் திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களாக வசூல் வேட்டை நடத்தியது. அப்படம் இதுவரை உலகளவில் ரூ.410 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது கோட்.

இதையும் படியுங்கள்... லோகேஷின் LCU.. யூனிவெர்சில் இணையும் "SKவின் நாயகி?" - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

45
GOAT Movie Box Office

GOAT Movie Box Office

2 வாரங்களாக திரையரங்குகளை ஆக்கிரமித்து இருந்த கோட் திரைப்படத்தை கடந்த வாரம் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம் ஓரங்கட்டி உள்ளது. லப்பர் பந்து படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் அதற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, கோட் படத்தின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கோட் படத்துக்கு கூட்டமில்லாததால் அதற்கு பதிலாக லப்பர் பந்து திரைப்படம் பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகின்றன.

55
GOAT movie OTT Release Date

GOAT movie OTT Release Date

இந்த நிலையில், கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கோட் திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், ஓடிடியில் கோட் திரைப்படம் டைரக்டர்ஸ் கட் ஆக ரிலீஸ் ஆக உள்ளது. அதன் மொத்த ரன்னிங் டைம் 3 மணிநேரம் 40 நிமிடம் இருக்குமாம். தியேட்டரில் இடம்பெறாத சீன்கள் ஓடிடியில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் சீசன் 8 தமிழ்.. போட்டியாளராக களமிறங்குகிறாரா அந்த கிளாசிக் காமெடியன்? தீயாய் பரவும் நியூஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved