ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 5 ஒர்த்தான வெப் சீரிஸ் இதோ
ஓடிடி தளங்களில் படங்கள் மட்டுமல்லாது வெப் தொடர்களும் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 5 வெப் தொடர்களை பற்றி பார்க்கலாம்.
Top 5 Must Watch Indian Web Series
ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளதால் அதில் நேரடியாக திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அப்படி வெளியாகும் வெப் தொடர்கள் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதையுடன் இருப்பதால் அதற்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது. அப்படி ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 5 இந்திய வெப் தொடர்கள் பற்றி பார்க்கலாம்.
SCAM 1992
1. ஸ்கேம் 1992
ஹர்ஷத் மேஹ்தா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆன வெப் தொடர் தான் ஸ்கேம் 1992. ஸ்டாக் மார்க்கெட்டில் கடந்த 1992-ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய ஊழலை மையமாக வைத்து இந்த வெப் தொடர் எடுக்கப்பட்டு இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூடிய இந்த வெப் தொடர் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த வெப் தொடருக்கு ஐஎம்டிபி-யில் 9.2 ரேட்டிங்கும் கிடைத்துள்ளது.
The Family Man
2. தி பேமிலி மேன்
ஓடிடியில் வெளியான மற்றுமொரு தரமான வெப் தொடர் தான் தி பேமிலி மேன். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர். இந்த வெப் தொடர் இதுவரை இரண்டு சீசன்களாக வெளிவந்துள்ளன. இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடருக்கு ஐஎம்டிபி-யில் 8.7 ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
இதையும் படியுங்கள்... ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 மூவீஸ் & வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
The Railway Men
3. தி ரயில்வே மேன்
போபாலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து கொடிய வாயு கசிவுக்குப் பிறகு, ரயில்வே ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களைக் காப்பாற்றும் ஒரு விறுவிறுப்பான வெப் தொடர் தான் தி ரயில்வே மேன். இந்த வெப் தொடரை ஷிவ் ரவாலி இயக்கி உள்ளார். இதில் மாதவன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். ஐஎம்டிபி-யில் 8.5 ரேட்டிங்கை பெற்றுள்ள இந்த வெப் தொடர் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
Farzi
4. ஃபர்ஸி
கள்ளநோட்டு கும்பலை மையமாக வைத்து உருவான வெப் தொடர் தான் ஃபர்ஸி. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்கினர். இதில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த வெப் தொடர் மொத்தம் 8 எபிசோடுகளை கொண்டது. இந்த வெப் தொடருக்கு ஐஎம்டிபி-யில் 8.3 ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
Breathe
5. பிரீத்
பிரீத் ஒரு கிரைம் த்ரில்லர் வெப் தொடராகும். கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த இந்த வெப் தொடரை மயங்க் ஷர்மா இயக்கி இருந்தார். இதன் முதல் சீசனில் மாதவனும் இரண்டாவது சீசனில் அபிஷேக் பச்சனும் நடித்திருந்தனர். இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த வெப் தொடருக்கு ஐஎம்டிபி-யில் 8.3 ரேட்டிங் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட ஜூனியர் NTR-யின் 'தேவாரா'! எப்போது ரிலீஸ் தெரியுமா?