பாவனி - அமீரை தொடர்ந்து மாலையும் கழுத்துமாக... திருமண கோலத்தில் கண் கலங்கிய தாமரை! வைரலாகும் போட்டோஸ்..!
நேற்றைய தினம் அமீர் - பாவனி திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து, தற்போது தாமரை தன்னுடைய கணவருடன் திருமண கோலத்தில் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தாமரைச் செல்வி.
நாடகக் கலைஞரான இவர், இந்த நிகழ்ச்சி என்ன என்பது தெரியாமலே கலந்து கொண்டார். எனவே 5 வரன்கள் தாக்குபிடிப்பதே மிகவும் கடினம் என அனைவரும் நினைத்த நிலையில், சுமார்... 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் நிலைத்து விளையாடினார்.
மேலும் செய்திகள்: 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலில் இருந்து விலகியது ஏன்? பகீர் காரணங்களால்... பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!
மற்ற போட்டியாளர்களை விட பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த தாமரைக்கு 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வெளியேற வாய்ப்பு இருந்தும்... அதனை மறுத்துவிட்டார். இதனால் பிக்பாஸ் பார்வையாளர்களின் அபிமான போட்டியாளர்கள் லிஸ்டில் இவரும் இணைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை செல்லும் வாய்ப்பை நழுவ விட்டாலும், தாமரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனைப் சரியாக பயன்படுத்திக் கொண்ட தாமரை இதில் இறுதிப்போட்டி வரை வந்து மூன்றாம் இடம் பிடித்தார்.
மேலும் செய்திகள்: எல்லை மீறிய கவர்ச்சி... பேன்ட் போடாமல் ஷர்ட் மட்டும் அணிந்து... பப்பி ஷேமாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!
தற்போது, பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 போட்டியில்... தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டு தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தாமரைக்கு இருக்கும் ரசிகர்களை விட அவரது கணவருக்கு அதீத ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது செமி பைனலுக்கு தயாராகி வரும் நிலையில், இந்த வாரம் ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் திருமண கோலத்தில் வந்து அசத்த உள்ளதாக தெரிகிறது. அதன்படி நேற்றைய தினம் பாவனி - அமீர் ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது தாமரையின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: Holy Wound : பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஓடிடியில் வெளியாகும் லெஸ்பியன் டிராமா "ஹோலி வுண்ட்" !
இதில், தாமரை செல்வி மற்றும் அவரது கணவர் இருவரும், புது பொண்ணு - மாப்பிள்ளை போல் மாலையும், கழுத்துமாக மணக்கோலத்தில்... உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த போட்டோஸ் வேற லெவலுக்கு சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.