MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இன்பநிதிக்கு போட்டியாக தளபதி மகனா? அரசியல்வாதி வீட்டு திருமண நிகழ்ச்சியில் விஜய் மகன்!!

இன்பநிதிக்கு போட்டியாக தளபதி மகனா? அரசியல்வாதி வீட்டு திருமண நிகழ்ச்சியில் விஜய் மகன்!!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அரசியல்வாதி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டுள்ளதால், இவர் இன்பநிதிக்கு போட்டியாக வருங்காலத்தில் அரசியல் செய்வாரா? என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் போட துவங்கியுள்ளனர். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 26 2025, 05:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு ஆண்டு தொடக்க விழா:

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு ஆண்டு தொடக்க விழா:

தளபதி விஜய் கடந்த 2023-ஆம் ஆண்டு துவங்கிய, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு ஆண்டு தொடக்க விழாவில் இன்று மிகவும் பிரமாண்டமாக நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தவெக ஆண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.

26
3000 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி:

3000 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி:

இதில் 3,000 முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் தவெக ஆண்டு விழாவில் பங்கேற்பதற்கான பாஸ் இருப்பவர்கள் மட்டும்தான் விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அனுமதி மறுக்க, நிகழ்ச்சி நடக்கும் தனியார் விடுதிக்கு வெளியே கூட்டம் நிரம்பி வழிகிறது. இதில் தேர்தல் வியூக அமைப்பாளராக பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதன் மூலம் 2026-ஆம் ஆண்டு விஜய் சந்திக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தான் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

 

கேரட் அல்வா முதல் ஐஸ்கிரீம் வரை.! தொண்டர்களுக்காக விஜய்யின் ருசியான உணவுகள்- பட்டியல் இதோ

36
தளபதி விஜய்யின் அரசியல் பணி

தளபதி விஜய்யின் அரசியல் பணி

தளபதி விஜய் ஒரு பக்கம் தன்னுடைய அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சையும் அரசியல் பிரபலம் வீட்டு திருமணத்திற்கு விசிட் அடித்துள்ளது, இவரும் வருங்கால அரசியல் வாரிசா? என்று கமெண்ட் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
 

46
கௌரவ தலைவரான ஜிகே மணியின் வீட்டு திருமண நிகழ்ச்சி

கௌரவ தலைவரான ஜிகே மணியின் வீட்டு திருமண நிகழ்ச்சி

தளபதி மகன் சஞ்சய், நேற்றைய தினம் பாமகவின் கௌரவ தலைவரான ஜிகே மணியின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டுள்ளார். சேலத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், ஜேசன் விஜய் அப்பாவுக்கு பதிலாக கலந்து கொள்ளவில்லை என்றும், லைகா நிறுவனத்தின் கீழ் இவர் புதிதாக ஒரு படத்தை இயக்கி வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் அதிகாரி தமிழ் குமரன் அழைப்பின் பெயரில் தான் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
 

56
அரசியலில் என்ட்ரி கொடுப்பாரா?

அரசியலில் என்ட்ரி கொடுப்பாரா?

எனினும் திமுக, கட்சி வாரிசு அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், உதயநிதிக்கு பின்னர் அவருடைய மகன் இன்ப நிதியும் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார் என கூறப்படுகிறது. எனவே இந்த லிஸ்டில் ஜேசன் சஞ்சய்யும் அப்பாவின் கட்சியில் இணைந்து கட்சி பணிகளை கையில் எடுப்பாரா? என்பது பற்றி பொறுத்திருந்து பார்போம்.

ஃபாசிசம் பாஜகவும், பாயாசம் திமுக-வும் எல்கேஜி பசங்க மாதிரி சண்டை போடுறாங்க - விஜய் பேச்சு

66
ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அப்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் ஜேசன் சஞ்சய்யை பார்த்து ரசிகர்கள் பலர் அப்படியே தளபதி விஜய் போலவே இருப்பதாக கூறி வருகிறார்கள். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved