அவசரப்பட்டு இப்படி பண்ணிட்டேனே... கோட் படம் பார்த்ததும் வருத்தத்துடன் VP-யிடம் விஜய் கூறிய விஷயம்
கோட் படத்தை பார்த்த நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் படம் பற்றிய தனது விமர்சனத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
venkat prabhu, vijay
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் விஜய் தற்போது கோட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். விஜய்யுடன் அவர் கூட்டணி அமைக்கும் முதல் படம் இதுவாகும். கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்யும், யுவனும் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
GOAT Movie Vijay
கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி செளத்ரி, மைக் மோகன், சினேகா, நிதின் சத்யா, அஜ்மல், பிரபுதேவா, லைலா, பிரசாந்த், பிரேம்ஜி, பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால், அதற்காக டீ-ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகர் விஜய்யை இளமையாக காட்டி இருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... ஒரே படத்தில் பேம்ஸ் ஆகி... பின் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன 5 நடிகைகள் லிஸ்ட் இதோ
vijay watched GOAT movie
கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அதன் இறுதிக்கட்ட பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோட் படத்தின் சிறப்பு காட்சியை இயக்குனர் வெங்கட் பிரபு உடன் சேர்ந்து பார்த்துள்ள நடிகர் விஜய், அப்படத்தின் முதல் விமர்சனத்தையும் கூறி இருக்கிறார். படம் பார்த்த பின் தளபதி என்ன சொன்னார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
Vijay GOAT movie review
அதன்படி, படம் பார்த்து பிரம்மித்துப் போன விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம், கலக்கிட்ட என பாராட்டிய விஜய், அவசரப்பட்டு retirement அறிவிச்சிட்டேன்.. உன் கூட இன்னொரு படம் பண்ணிருக்கலாம் என வருத்தத்துடன் கூறினாராம். சமீபத்தில் விஜய்யின் டீ ஏஜிங் லுக் விமர்சனத்துக்குள்ளானதை நோட் பண்ணிய படக்குழு அதனை சரிசெய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக கோட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பிரேம்ஜிக்கு பெண்ணே கொடுக்க கூடாதுனு சொன்னேன்..! மனம் மாறியது எப்படி? மாமியார் கூறிய தகவல்!