- Home
- Cinema
- ‘0277’ கார் முதல் பிரச்சார பஸ் வரை விஜய் யூஸ் பண்ணும் ஒரே நம்பர் பிளேட்; பின்னணியில் இப்படியொரு சென்டிமெண்டா?
‘0277’ கார் முதல் பிரச்சார பஸ் வரை விஜய் யூஸ் பண்ணும் ஒரே நம்பர் பிளேட்; பின்னணியில் இப்படியொரு சென்டிமெண்டா?
Vijay : நடிகர் விஜய் தான் பயன்படுத்தும் கார் முதல், பிரச்சார பஸ் வரை அனைத்து வாகனங்களுக்கும் ஒரே நம்பர் பிளேட் வைத்திருக்கிறார் அதன் பின்னணியை பார்க்கலாம்.

Vijay Car Number Plate Secret
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் விஜய், வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட தயாராகி வருகிறார். அரசியலில் களமிறங்கி உள்ளதால் சினிமாவில் இருந்தும் விலக முடிவெடுத்துள்ளார் விஜய். இதனால் ஜனநாயகன் தான் தன்னுடைய கடைசி படம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார் விஜய். இந்த நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய கார் முதல் பிரச்சார பஸ் வரை ஒரே நம்பர் பிளேட்டை பயன்படுத்தி வரும் தகவல் தெரியவந்துள்ளது.
ஒரே நம்பர் பிளேட் பயன்படுத்தும் விஜய்
நடிகர் விஜய் பல்வேறு சொகுசுக் கார்கள் வைத்திருக்கிறார். அதில் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரையும் வைத்திருந்த விஜய், அதை விற்றுவிட்டு கடந்த ஓராண்டு இடைவெளியில் மட்டும் மூன்று புதுக் கார்களை வாங்கி இருக்கிறார். அதில் ஒன்று பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார், மற்றொன்று லெக்சஸ் எல் எம் கார், மூன்றாவதாக டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு காரான வேல் ஃபயர். இதுமட்டுமின்றி தற்போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பஸ் ஒன்றும் வாங்கி இருக்கிறார். இப்படி விஜய் சமீபத்தில் வாங்கிய அனைத்து வாகனங்களுக்கும் ஒரே நம்பர் பிளேட்டை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.
அந்த நம்பர் என்ன?
விஜய் பயன்படுத்தும் வாகனங்களில் 0277 என்கிற நம்பர் தான் இடம்பெற்று இருக்கிறது. இதில் அவரின் பிஎம் டபிள்யூ எலெக்ட்ரிக் காரில் TN 14 AH 0277 என்கிற நம்பரும், லெக்சஸ் காரில் TN 14 AL 0277 என்கிற நம்பரும், வேல் ஃபயர் காரில் TN 14 AM 0277 என்கிற நம்பர் பிளேட்டும், அவர் புதிதாக வாங்கி உள்ள பிரச்சார பேருந்தில் TN 14 AS 0277 என்கிற நம்பர் பிளேட்டும் இடம்பெற்று உள்ளது. இவை அனைத்திலும் 14-02-77 என்கிற நம்பர் தவறாமல் இடம்பெற்று இருக்கிறது. இப்படி விஜய் விரும்பி கேட்டு வாங்கும் அளவுக்கு அந்த நம்பரில் ஒரு சென்டிமெண்ட்டும் ஒளிந்திருக்கிறது.
நம்பர் பிளேட் ரகசியம்
அந்த சென்டிமெண்ட் வேறெதுவுமில்லை, விஜய்யின் தங்கச்சி பாசம் தான். நடிகர் விஜய்யின் தங்கை வித்யா சிறுவயதிலேயே இறந்துவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே, தங்கை மீது விஜய் அதீத பாசம் வைத்திருந்தார். அவரின் நினைவாகவே தான் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஒரே நம்பரை பயன்படுத்தி வருகிறாராம் விஜய் . 14-02-77 என்பது விஜய்யின் தங்கை வித்யாவின் பிறந்த தினமாம். அவர் மீதுள்ள பாசம் காரணமாக தன்னுடைய வாகனங்களில் அந்த நம்பரை பயன்படுத்தி வருகிறாராம் விஜய். இதைப்பார்த்த ரசிகர்கள், தங்கை பாசத்தில் தளபதியை அடிச்சுக்க ஆளே இல்லை என பாராட்டி வருகிறார்கள்.