MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Varisu movie : பிரபல பிரென்ச் படத்தின் காப்பியா வாரிசு..? இணையத்தில் தீயாய் பரவும் ‘தளபதி 66’ பட கதை

Varisu movie : பிரபல பிரென்ச் படத்தின் காப்பியா வாரிசு..? இணையத்தில் தீயாய் பரவும் ‘தளபதி 66’ பட கதை

Varisu story Leaked : இயக்குனர் வம்சி இதற்கு முன் இயக்கிய தமிழ் படமான தோழாவும், ஒரு பிரெஞ்ச் படத்தை தழுவி தான் எடுக்கப்பட்டிருந்தது. ஆதலால் வாரிசு படமும் அவ்வாறு எடுக்கப்பட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 05 2022, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய்யின் 66-வது படம் வாரிசு. வம்சி இயக்கி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக புஷ்பா பட நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதுதவிர சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், சங்கீதா, சம்யுக்தா, பிரபு, குஷ்பு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்.... இரவில் போட்ட அந்த போஸ்ட்டால் குழம்பிப்போன ரசிகர்கள்... ஹேக் செய்யப்பட்டதா சமந்தாவின் இன்ஸ்டாகிராம்?

24

வாரிசு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து 2-ம் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தி முடித்த படக்குழு, தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்.... ராஜ்ஜியம் இல்லாத இளவரசன்.... பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக வாகைசூட வரும் கார்த்தி - வைரலாகும் மாஸ் லுக்

34

இந்நிலையில், வாரிசு படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி லார்கோ வின்ச் என்கிற பிரென்ச் படத்தின் கதையும் வாரிசு படத்தின் கதையும் ஒன்றுதான் என கூறப்படுகிறது. லார்கோ வின்ச் படத்தின் கதைப்படி ஒரு பணக்கார தொழிலதிபர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். பின்னர் அந்த தொழிலபருக்கு ரகசிய வாரிசு இருப்பது தெரியவருகிறது. இதையறிந்த வில்லன்கள் அந்த வாரிசை கொல்ல நினைக்கிறார்கள். அவற்றிலிருந்து நாயகன் எப்படி தப்பித்தார் என்பதை திருப்பங்களுடன் தெரிவித்திருக்கும் படம் தான் லார்கோ வின்ச்.

இதையும் படியுங்கள்.... வரவேற்பை பெற்ற '777 சார்லி'... லாபத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்க முடிவு ...

44

விஜய்யின் வாரிசு படமும் லார்கோ வின்ச் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இயக்குனர் வம்சி இதற்கு முன் இயக்கிய தமிழ் படமான தோழாவும், ஒரு பிரெஞ்ச் படத்தை தழுவி தான் எடுக்கப்பட்டிருந்தது. ஆதலால் வாரிசு படமும் அவ்வாறு எடுக்கப்பட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved