வரவேற்பை பெற்ற '777 சார்லி'... லாபத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்க முடிவு ...
இந்திய கன்னட மொழி திரைப்படமான 777 சார்லி படம் 100 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் லாபத்தை தொண்டு நிறுவனங்களுக்கு பகிர படக்குழு முடிவு செய்துள்ளது.

777 Charlie
விலங்குகள் மீதான அத்துமீறலை மையமாக கொண்டுள்ள 777 சார்லி, செல்லப்பிராணிகள் குறித்த கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது. கன்னட மொழி திரைப்படமான இதை கிரண்ராஜ் கே என்பவர் எழுதி இயக்கியுள்ளார். பரம்வா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இதில் முக்கிய காதாபாத்திரத்தில் சார்லி என்ற லாப்ரடோர் நாய், ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி , ராஜ் பி. ஷெட்டி , டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர் .
777 Charlie
தனிமையின் பிடியில் சிக்கி தவிக்கும் ஒருவரின் சூழலை செல்ல பிராணி ஒன்று மாற்றுகிறது. ஒரு நாயால் ஏற்பட்ட கார் விபத்தில் தனது பெற்றோரை இழந்த நாயகன் விலங்குகள் மீது வெறுப்பை கக்கும் ஒரு நபராகவும், எப்போதும் தனிமையில் இருப்பவராகவும் இருக்கிறார். எங்கிருந்தோ தப்பி வந்த நாய் குட்டி இவரை தன காப்பாளராக எண்ணி பின் தொடர்ந்து நாயகனின் மனதை மாற்றுகிறது. ஒரு நாள் அந்த குட்டிக்கு விபத்து ஏற்பட மருத்துவரிடம் நாயகன் தன் செல்ல பிராணியை கொண்டு செல்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...ஜெபமலராய் புன்னகையை தெறிக்கவிடும் பிரியா பவானி ஷங்கர்... 'யானை' ஷூட்டிங் அன்சீன் போடோஸில் அவ்வளவு அழகு!!
777 Charlie
அப்போதுதான் இந்த நாய் குட்டிக்கு நிகழ்ந்த கொடுமைகள் ஹீரோவுக்கு தெரியவர, சார்லியின் முன்னாள் ஓனரை பழிவாங்க புறப்படுகிறார். அதோடு தன செல்ல குட்டிக்கு மிகவும் பிடித்த பனி விளையாட்டிற்காக காஷ்மீர் அழைத்து செல்கிறார் நாயகன். பின்னர் அந்த மோசமான நபரை கண்டறிந்து அவரை தாக்குகிறார் ஹீரோ.
மேலும் செய்திகளுக்கு... ஆதித்த கரிகாலனுக்கு நாமமா..? அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கிய பொன்னியின் செல்வன் பட போஸ்டர்!
777 Charlie
ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் சுமார் ரூ.100 கோடியை வசூல் செய்தது. படம் வெளிவரும் முன்னரே ட்ரைலர் மூலம் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் ஜூன் 10 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.தற்போது 25 வது நாள் கொண்டாட்ட்த்தில் உள்ள இந்த பட குழுவினர் தங்களது லாபத்திலிருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து கொடுக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு... ராஜ்ஜியம் இல்லாத இளவரசன்.... பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக வாகைசூட வரும் கார்த்தி - வைரலாகும் மாஸ் லுக்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.