விஜய்யின் மாஸான போஸ்டர் உடன் வாரிசு பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வம்சி. தமிழில் ஏற்கனவே கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியுள்ள இவர், தற்போது நடிகர் விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் தான் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சங்கீதா, குஷ்பு, பிரபு, ஷியாம், சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். அவர் விஜய்யுடன் பணியாற்றுவது இதுவே முதன்முறை. தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள வாரிசு திரைப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறைக்கு திரைகாண உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது? சர்ச்சைகள் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசிய அசல் கோளார்
வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போதே இப்படத்தின் பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.280 கோடி வரை வசூலித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க இப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் எப்போது ரிலீசாகும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அப்படக்குழு குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளது. அதன்படி வாரிசு படத்தின் முதல் பாடல் புரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு, நடிகர் விஜய்யின் மாஸான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். இந்த சர்ப்ரைஸ் அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டதால் அதிரடியாக OTT ரிலீஸ் தேதியை அறிவித்த பிரின்ஸ் படக்குழு - எப்போ ரிலீஸ்?