தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டதால் அதிரடியாக OTT ரிலீஸ் தேதியை அறிவித்த பிரின்ஸ் படக்குழு - எப்போ ரிலீஸ்?
தீபாவளிக்கு ரிலீசாகி தோல்வியை சந்தித்த சிவகார்த்த்கேயனின் பிரின்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் அங்கு ஜாதி ரதனலு என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அனுதீப்பை தேர்வு செய்தார் சிவகார்த்திகேயன். இதனால் படம் வேறலெவலில் வெற்றியடைய போகிறது என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக இப்படத்தை தீபாவளி வெளியீடாக ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தனர். இதனால் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புடன் கார்த்தியின் சர்தார் படத்துக்கு போட்டியாக தீபாவளிக்கு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது? சர்ச்சைகள் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசிய அசல் கோளார்
படத்தின் முதல் ஷோவிலேயே அதன் ரிசல்ட்டும் தெரிந்துவிட்டது. எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது இந்த படம். இதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் காமெடி காட்சிகள் எடுபடாதது தான். இது மிஸ்டர் லோக்கல் பார்ட் 2 என்றெல்லாம் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஒரே வாரத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து இப்படம் தூக்கப்பட்டதால் விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த வாரம் நிறைய படங்கள் ரிலீஸ் ஆவதால் இன்றுடன் பிரின்ஸ் படம் மூடுவிழா காண உள்ளது. இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 25-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... மீண்டும் காதல்... சிம்பு - திரிஷா குறித்து விரைவில் வருகிறது குட் நியூஸ்..!