MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சுடசுட வந்த வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்... தளபதியின் தர லோக்கல் சாங் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சுடசுட வந்த வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்... தளபதியின் தர லோக்கல் சாங் எப்போ ரிலீஸ் தெரியுமா?

Varisu : வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைகாண உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : Sep 02 2022, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவியது. இதனால் அடுத்தபடத்தில் நிச்சயம் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் விஜய். இவர் நடிக்கும் 66-வது படத்தை வம்சி இயக்கி வருகிறார். வாரிசு என பெயரிடப்பட்டு உள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

24

வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, குஷ்பு, பிரபு, ஷியாம், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் செயலி வடிவமைப்பாளராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... லவ் யூ அம்மு... ரவீந்தர் உடனானது காதல் திருமணமா?- கல்யாணத்துக்கு பின் நடிகை மகாலட்சுமி போட்ட முதல் பதிவு வைரல்

34

வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைகாண உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஜூன் மாதம் நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி வைரலாகின. இதையடுத்து இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை.

44

இந்நிலையில், வாரிசு படத்தின் அடுத்த அப்டேட் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு படக்குழு அப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நடிகர் விஜய்யின் எண்ட்ரி சாங்கை தான் அப்படக்குழு முதலாவதாக ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தங்கமாய் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே..சல்வாரில் கியூட் போட்டோஸ் இதோ !

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
ராஷ்மிகா மந்தனா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved