MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லவ் யூ அம்மு... ரவீந்தர் உடனானது காதல் திருமணமா?- கல்யாணத்துக்கு பின் நடிகை மகாலட்சுமி போட்ட முதல் பதிவு வைரல்

லவ் யூ அம்மு... ரவீந்தர் உடனானது காதல் திருமணமா?- கல்யாணத்துக்கு பின் நடிகை மகாலட்சுமி போட்ட முதல் பதிவு வைரல்

Ravindar Chandrasekaran : தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பின் நடிகை மகாலட்சுமி போட்டுள்ள இன்ஸ்டாகிரம் பதிவு வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 02 2022, 01:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன்மூலம் ஏராளமான படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்ட நிலையில், நேற்று திடீரென சீரியல் நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்தார் ரவீந்தர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நடிகை மகாலட்சுமிக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர் அனில் குமார் என்பவரை முதலாவதாக திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன்பின் சீரியல் நடிகருடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்து வந்தன.

35

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார் நடிகை மகாலட்சுமி. இவர்களது திருமணம் நேற்று திருப்பதியில் நடைபெற்றது. திருமணம் முடிந்த உடனே தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்ட ரவீந்தர், மகாலட்சுமியே மனைவியாக வந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்... ரவீந்தரை திருமணம் செய்துள்ள.. சீரியல் நடிகை மஹாலட்சுமி முதல் கணவர் யார்? விவாகரத்துக்கு என்ன காரணம் தெரியுமா?

45

அதேபோல் திருமணம் பற்றி நடிகை மகாலட்சுமி போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவும் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: “உங்களை என் வாழ்வில் துணையாக பெற்றது எனது அதிர்ஷ்டம். உங்களது காதலால் என் வாழ்க்கை முழுமையடைந்துள்ளது. லவ் யூ அம்மு” என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்கள் என்பது தெரிகிறது.

55

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவீந்தர் தயாரிப்பில் புதிதாக தொடங்கப்பட்ட “விடியும் வரை காத்திரு” என்கிற படத்தில் நடிகை மகாலட்சுமி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் ரவீந்தர் தயாரிக்கும் ஆண்டவர் என்கிற படத்திற்கு வாழ்த்து தெரிவித்து மகாலட்சுமி பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் அப்போ 8 மாசமா ரகசியமா காதலிச்சுகிட்டு தான் இருந்தீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... என்ன ஒரு தாராள மனசு... படம் பிளாப் ஆனதால் சம்பளத்தை திருப்பிகொடுத்த அமீர்கான் - அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved