கேரளா தளபதியின் கோட்டை... மீண்டும் நிரூபித்த விஜய்! வலிமை லைஃப்டைம் கலெக்ஷனை முதல் நாளே அடிச்சுதூக்கிய வாரிசு
தளபதியின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் அஜித்தின் வலிமை பட லைஃப் டைம் கலெக்ஷனை விஜய்யின் வாரிசு திரைப்படம் ஒரே நாளில் முறியடித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் படங்களுக்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு மவுசு இருக்கிறதோ அதேபோல் கேரளாவிலும் தளபதியின் படங்களுக்கு தடபுடலான வரவேற்பு கிடைக்கும். அங்கும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக விஜய் படமும் கொண்டாடப்படும்.
இதனால் கேரளா விஜய்யின் கோட்டையாக கருதப்படுகிறது. அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் நேற்று ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களில் தமிழ்நாட்டில் அதிக கலெக்ஷனை அள்ளியது துணிவு படமாக இருந்தாலும், மற்ற மாநிலங்களில் விஜய்யின் வாரிசு படம் தான் வசூலை வாரிக்குவித்துள்ளது. இதன்காரணமாக உலகளவிலான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் வாரிசு நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... துணிவு vs வாரிசு... பொங்கல் ரேஸில் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்? அதிக கலெக்ஷனை அள்ளியது விஜய்யா?.. அஜித்தா?
கேரளாவை பொறுத்தவரை அது தனது கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் விஜய். கேரளாவில் விஜய்யின் வாரிசு திரைப்படம் முதல் நாளில் கிட்டத்தட்ட ரூ.4 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கேரளாவில் இதுவரை வெளியான விஜய் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையை வாரிசு படைத்துள்ளது.
துணிவு படம் கேரளாவில் ரூ.1 கோடி வசூலித்துள்ளது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கேரளாவில் அஜித்தின் வலிமை பட லைஃப் டைம் கலெக்ஷனை விஜய்யின் வாரிசு திரைப்படம் ஒரே நாளில் முறியடித்துள்ளது. வலிமை படம் கேரளாவில் மொத்தமாக ரூ.2.95 கோடி வசூலித்து இருந்தது. வாரிசு படம் முதல் நாளிலேயே ரூ.4 கோடிக்கு மேல் வசூலித்து அதனை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தமிழகத்தில் ஓபனிங் கிங்: மீண்டும் ஒருமுறை நிரூபித்த அஜித் குமார்!