தளபதி உடன் ஜோடி போட்ட நடிகை இன்ஸ்டாவில் போட்ட பதிவு.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாலிவுட் நடிகை இலியானா டி’குரூஸ் 2025 ஆம் ஆண்டின் தொடக்கமான தற்போது மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார்.

தளபதி உடன் ஜோடி போட்ட நடிகை இன்ஸ்டாவில் போட்ட பதிவு.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இலியானாவும் மைக்கேல் டோலனும் 2023 ஆம் ஆண்டு ஒரு எளிய விழாவில் திருமணம் செய்து கொண்டனர். அந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனது முதல் கர்ப்பத்தை அறிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். சில மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம், தனது மகனின் பிறப்பை அறிவித்தார்.
நடிகை இலியானா
இலியானா கடைசியாக ஷிர்ஷா குஹா தாக்குர்தா இயக்கிய 'டோ அர் டோ ப்யார்' என்ற காதல் நகைச்சுவைப் படத்தில் நடித்திருந்தார். தற்போது, நடிகை இலியானா தனது அடுத்த திட்டம் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இலியானா பாலிவுட் படம்
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இரவு உணவுடன் ஒரு ஆன்டாசிட்டை காட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆண்டின் தொடக்கத்தில், இலியானா தனது குடும்பத்தினருடன் சிறப்பு தருணங்களை கொண்ட காணொளியை வெளியிட்டார்.
இலியானா 2வது கர்ப்பம்
காணொளியில் அவரும் மைக்கேலும் தங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது போல் உள்ளது. அக்டோபர் மாதத்தில், அவர் நேர்மறையான கர்ப்ப பரிசோதனை கருவியை காட்டினார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.