விஜய்யின் கோட் படத்தை கழற்றிவிட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழா – பிளானோடு வந்த அமரன்!
Thalapathy Vijay GOAT Not Screened at Chennai International Film Festival : சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியல் வெளியான நிலையில் அதில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் இடம் பெறவில்லை.
The Greatest of All Time
Thalapathy Vijay GOAT Not Screened at Chennai International Film Festival : ஆண்டுதோறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட் விழா நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக 2002 ஆம் ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டது. இதில், சர்வதேச மற்றும் இந்திய திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான 22ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் 12 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
Thalapathy Vijay Goat Movie Not Screened in Chennai International Film Festival
இந்த நிலையில் தான் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தீபாவளிக்கு வெளியான அமரன படம் கூட இடம் பெற்றிருந்த நிலையில் விஜய் நடிப்பில் வந்த The Greatest of All Time கோட் படம் இடம் பெறவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கிறது. 2024ஆம் ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் குவித்த டாப் 10 படங்களின் பட்டியலில் கோட் படமே உலகளவில் ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து முதலிடத்தில் இருக்கிறது.
Amaran, Chennai International Film Festival
அப்படிப்பட்ட கோட் படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் பட்டியலில் இடம் பெறாதது சற்று வேதனை அளிக்கிறது. தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் அமரன், போட், புஜ்ஜி அட் அனுப்பட்டி, செவப்பி, ஜமா, கொட்டுக்காளி, கோழிப்பண்ணை செல்லதுரை, லப்பர் பந்து, மகாராஜா, மெய்யழகன், நந்தன், ரசவாதி, தங்கலான், வாழை, வெப்பம் குளிர் மழை, வேட்டையன், அயலி, டிமாண்டி காலனி 2, கருடன், ஹாட்ஸ்பாட், லாக்டவுன், நீல நிற சூரியன், பார்க்கிங், டீன்ஸ், வல்லவன் வகுத்ததடா ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
Chennai International Film Festival, Aadujeevitham: The Goat Life
இதே போன்று உலக சினிமா படங்களின் பட்டியலில் கிணறு என்ற ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இது தவிர தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியன் பனோரமா பிரிவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற ஒரு தமிழ் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இது தவிர மலையாளத்தில் வெளியான ஆடுஜீவிதம், கிஷ்கிந்தா காண்டம், லெவல் கிராஸ், பிக் பென், விஷேசம் உள்ளிட்ட படங்களும் ஹிந்தியில் வெளியான 12th Fail படமும் இடம் பெற்றுள்ளன.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியல்!