தளபதி விஜய் ஓட்டி வந்த சைக்கிள் விலை இவ்வளவா?... வாயை பிளக்கும் ரசிகர்கள்...!
விஜய் வந்த சைக்கிள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தது, அதன் விலை என்ன என்பது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. அதைவிட விறுவிறுப்பாக தளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த விவகாரம் பேசு பொருளாக மாறியது.
தளபதி விஜய் பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். விஜய் வீட்டு வாசலில் இருந்தே ரசிகர்கள் பட்டாளம் அவருடன் பைக்கில் பயணிக்க செம்ம ஸ்பீடாக சைக்கிளை ஓட்டி வந்த விஜய் தன்னுடைய வாக்கினை பதிவு செய்துவிட்டு அடுத்த 5 நிமிடத்திலேயே வீட்டிற்கு பறந்தார்.
விஜய் சைக்களில் வந்து வாக்களித்தது சோசியல் மீடியாவில் வைரலானது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறித்த தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய விஜய் சைக்களில் வந்ததாகவும், இல்லை அந்த சைக்கிளில் உள்ள கருப்பு, சிவப்பு நிறம் குறிப்பிட்ட கட்சியை குறிப்பதாக கூறி சிலர் பிரச்சாரம் செய்தனர்.
அதாவது விஜய் வாக்களிக்க வந்த நீலாங்கரை வாக்குச்சாவடியில் முறையான பார்க்கிங் வசதி இல்லை. அப்பகுதி மிகவும் குறுகலானது என்பதை கவனத்தில் கொண்டே தளபதி விஜய் காரில் வருவதை தவிர்த்ததாக கூறப்பட்டது.
பார்க்கிங் பிரச்சனைக்காக மட்டுமே விஜய் சைக்கிளில் வந்ததாகவும், இதில் எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை என்றும் அவருடைய மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டது.
இதனிடையே விஜய் வந்த சைக்கிள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தது, அதன் விலை என்ன என்பது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தகவல்களை பரப்பி வருகின்றனர். விஜய் ஓட்டி வந்தது டிஐ என்ற நிறுவனத்தைச் சேர்ந்தது. உடற்பயிற்சி மற்றும் டிராவல் இரண்டிற்கும் ஏற்ற மாதிரியான அந்த சைக்கிளின் விலை, ரூ.22 ஆயிரத்து 800 என்பதயும் விஜரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.