Thalapathy Vijay Birthday : தளபதி விஜயால் புறக்கணிக்கப்பட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள் ..
Thalapathy Vijay Birthday : தளபதி விஜய் பிறந்த நாளான இன்று அவரால் நிராகரிக்கப்பட்ட 5 பிளாக்பஸ்டர் படங்களைப் பார்ப்போம்..அதற்கான காரணம் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
Run
ரன் :
ரன் என்பது 2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படமாகும், இதில் ஆர். மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படத்தயாரிப்பாளர் லிங்குசாமி இதை முதலில் தளபதி விஜய்யிடம் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் அது பலனளிக்கவில்லை என கூறியுள்ளார்.
mudhalvan
முதல்வன் :
முதல்வன், அர்ஜுன் மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் . இயக்குனர் ஷங்கர் ரஜினிகாந்தை படத்தில் நடிக்க அணுகியுள்ளார். பின்னர் விஜயிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் விஜய்க்கு இளம் வயதில் அரசியல் படங்களில் ஆர்வம் இல்லாததால் படத்தை நிராகரித்தார்.
sandakozhi
சண்டக்கோழி :
சண்டக்கோழி படத்தை என்.லிங்குசாமி இயக்கியிருந்தார். இயக்குனர் விஜய்யிடம் முழு ஸ்கிரிப்டையும் விவரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கதாநாயகனை விட அப்பா கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் நடிகர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
singam movie
சிங்கம் :
சூர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள சிங்கம் ஒரு ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படம் . ஹரி இயக்கிய இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க விஜய்யை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய் இந்த படத்தை மறுத்துவிட்டாராம்.
kaakha kaakha
காக்கா காக்கா :
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் காக்கா காக்கா. கௌதம், தளபதி விஜய்யை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் கதை சொல்லும் நேரத்தில் கதையின் க்ளைமாக்ஸுடன் இயக்குனர் தயாராக இல்லாததால் அவர் இந்த படத்தை நிராகரித்தார்.