MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளி கெத்துகாட்டிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன?

ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளி கெத்துகாட்டிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன?

ஓடிடியில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு உள்ளது. அதனைப் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 02 2025, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Top 5 Most Watched Movies and Web Series
Image Credit : instagram

Top 5 Most Watched Movies and Web Series

உலகில் எந்த மொழியில் வெளிவந்த படமாக இருந்தாலும் அதை வீட்டில் இருந்தபடியே பார்க்கும் வசதியை கொண்டு வந்தது ஓடிடி தளங்கள் தான். இதனால் அதன் மீதான கிரேஸ் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஓடிடியில் விஸ்வரூப வளர்ச்சியால் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. இது பெரிய நடிகர்களின் படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், சிறு பட்ஜெட் படங்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஓடிடியில் கடந்த வாரம் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டாப் 5 படங்கள்
Image Credit : Asianet News

டாப் 5 படங்கள்

ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் பவன் கல்யாணின் ஹரிஹர வீர மல்லு திரைப்படம் உள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படம் கடந்த வாரம் மட்டும் 20 லட்சம் வியூஸ்களை பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மா என்கிற இந்திப் படம் உள்ளது. கஜோல் நடிப்பில் உருவான மா திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அப்படம் கடந்த வாரத்தில் மட்டும் 22 லட்சம் பார்வைகளை பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.

35
அதிக வியூஸ் அள்ளிய தமிழ் படங்கள்
Image Credit : X//thinkmusicindia

அதிக வியூஸ் அள்ளிய தமிழ் படங்கள்

இந்தப் பட்டியலில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் இப்படத்திற்கு 24 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தையும் தமிழ் படம் தான் ஆக்கிரமித்து உள்ளது. அது வேறெதுவுமில்லை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த தலைவன் தலைவி தான். பாண்டிராஜ் இயக்கிய இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இப்படத்திற்கு கடந்த வாரத்தில் 26 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது.

45
முதலிடம் யாருக்கு?
Image Credit : Asianet News

முதலிடம் யாருக்கு?

அதிக வியூஸ் அள்ளிய படங்களின் பட்டியலில் முதலிடத்தை கிங்டம் திரைப்படம் தட்டிதூக்கி இருக்கிறது. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் நடித்திருக்கிறார். இப்படத்தை கெளதம் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படம், கடந்த வாரத்தில் மட்டும் 28 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

55
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள்
Image Credit : Jiohotstar

ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள்

அதிக பார்வைகளை பெற்ற டாப் 5 வெப் தொடர்கள் பட்டியலில் Sena என்கிற வெப் தொடர் 5ம் இடத்தில் உள்ளது. அமேசான் எம்.எக்ஸ் பிளேயரில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் தொடர் 12 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் சலாகார் வெப் தொடர் 13 லட்சம் வியூஸ் உடன் நான்காம் இடத்தில் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் தி கிரேட் இந்தியன் கபில் ஷோ நிகழ்ச்சி 18 லட்சம் பார்வைகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. Saare Jahan Se Accha என்கிற இந்தி வெப் தொடர், நெட்பிளிக்ஸில் 26 லட்சம் வியூஸ் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அமேசான் பிரைமில் உள்ள Half CA வெப் தொடரின் இரண்டாவது சீசன் 35 லட்சம் வியூஸ் உடன் முதலிடத்தில் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
Coolie : ரிலீசுக்கு முன்னரே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த கூலி? திரையரங்கு, ஓடிடி விற்பனை எத்தனை கோடி?
Recommended image2
ஷூட்டிங்கே முடியல அதற்குள் விற்பனையான ராஜமௌலி படத்தின் ஓடிடி உரிமம் - தட்டிதூக்கியது யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved