MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தீயாய் பரவிய வதந்தி.! சட்டுபுட்டுனு சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி திருமண தேதியை அறிவித்த குடும்பத்தினர்!

தீயாய் பரவிய வதந்தி.! சட்டுபுட்டுனு சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி திருமண தேதியை அறிவித்த குடும்பத்தினர்!

தெலுங்கு நடிகர் சர்வானந்த் நிச்சயதார்த்தம் முடிந்து, சில மாதங்கள் ஆன பிறகும் திருமண தேதி அறிவிக்கப்படாததால், இவருடைய திருமணம் நின்று போனதாக வதந்தி பரவிய நிலையில் தற்போது அவருடைய குடும்பத்தினர், சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

2 Min read
Author : manimegalai a
Published : May 17 2023, 05:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த பிரபலமான நடிகர் சர்வானந்த். இவருக்கும் ஐடி துறையில் வேலை செய்து வரும், இவரின் காதலி ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் மிகப்பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

27

இவர்களின் திருமண நிச்சயதார்த்தத்தில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த ராம் சரண், அவரின் மனைவி உபாசனா, ராணா, சிரஞ்சீவி, அவரின் மனைவி, சித்தார்த், அதிதி ராவ், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? மளமளவென வளர்ந்து இளம் ஹீரோயின்களை ஓரம் கட்டும் அழகில் ஜொலிக்கும் போட்டோஸ்!

37

சர்வானந்த் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேல் ஆன பிறகும், திருமணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சர்வானந்த் மற்றும் அவருடைய காதலி ரக்ஷிதா ரெட்டியின் திருமணம் நின்று விட்டதாக சில வதந்திகள் பரவுது தொடங்கியது. இதற்க்கு சர்வானந்த் தரப்பில் இருந்து அவருடைய நண்பர் ஒருவர், தற்போது சர்வானந்த், ஸ்ரீராம் ஆதித்யாவுடன் தனது வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஒரு மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டலின் இருந்த அவர் தற்போது தான் வந்துள்ளார்.

47

எனவே கூடிய விரைவில், அவருடைய குடும்பத்தினர் திருமணம் தேதி குறித்து முடிவு செய்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும், இது போல் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

த்ரிஷாவால் கார்த்தி குடும்பத்தில் வெடித்த பிரச்சனை? தினமும் சண்டை போடும் மனைவி! பகீர் கிளப்பிய பயில்வான்!

57

இதைத்தொடர்ந்து, தற்போது சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் ஜூன் மூன்றாம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

67

சர்வானந்த் திருமணம் செய்து கொள்ள உள்ள ரக்ஷிதா ரெட்டி, ஐடி துறையை சேர்ந்தவர் என்பதை தாண்டி... தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதி போஜல கோபாலகிருஷ்ணா ரெட்டியின் பேத்தி ஆவர். இவரது தந்தை மதுசூதனன் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல வாரிசு நடிகருடன் நடிகை லாவண்யா திரிபாதி காதல்... சைலண்டாக நடக்கும் திருமண வேலைகள்?
 

77

இவர்களுடைய திருமணம், அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமடைந்து வருகிறது. விரைவில் இவர்களுடைய திருமண பத்திரிக்கையும் வெளியாகும் என கூறப்படுகிறது. திருமண நிச்சயதார்த்தமே மிகப் பிரமாண்டமாக நடந்த நிலையில், அதை விட பல மடங்கு பிரமாண்டமாக திருமணத்தை நடத்த சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image2
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Recommended image3
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved