பிரபல வாரிசு நடிகருடன் நடிகை லாவண்யா திரிபாதி காதல்... சைலண்டாக நடக்கும் திருமண வேலைகள்?
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் லாவண்யா திரிபாதி, பிரபல வாரிசு நடிகரை காதலித்து வருவதாகவும், அவர்களது திருமண வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. இவரை பிரபலமாக்கியது தெலுங்கு சினிமா தான். தெலுங்கில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அண்டல ராக்ஷசி என்கிற படம் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார் லாவண்யா. இதையடுத்து சசிகுமார் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பிரம்மன் திரைப்படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்த அவருக்கு, தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிந்ததால், அங்கு செட்டிலானார்.
நடிகை லாவண்யா திரிபாதி நடிப்பில் தற்போது தணல் என்கிற தமிழ் படம் தயாராகி வருகிறது. இதுதவிர அவர் கைவசம் வேறு எந்த படமும் இல்லாததால் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது நடிகை லாவண்யா திரிபாதியின் காதல் விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அவரது திருமண நிச்சயதார்த்தமும் ஜூன் மாதம் நடக்க உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... அந்த கேரக்டர் மட்டும் எனக்கு கிடைச்சிருந்தா ராஷ்மிகாவ விட நல்லா நடிச்சிருப்பேன்- ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சைபேச்சு
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வருண் தேஜை தான் நடிகை லாவண்யா திரிபாதி காதலித்து வருகிறாராம். இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆன மிஸ்டர் படத்திலும், கடந்த 2018-ல் வெளிவந்த அந்தாரிக்ஷம் படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போதே இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இதைப்பற்றி இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த ஜோடி திருமணத்துக்கு தயாராகி வருகிறதாம். வருகிற ஜூன் மாதம் லாவண்யா திரிபாதி - வருண் தேஜ் ஜோடிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்க உள்ளதாம். நடிகர் வருண் தேஜ், தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஓடிடி தளங்களுக்கு டஃப் கொடுக்க தயாராகும் ஜியோ சினிமா... ஐபிஎல் முடிந்ததும் விஷ்ணு விஷாலின் படம் நேரடி ரிலீஸ்