அமீர் - பாவனி ஜோடியின் திருமணம் சட்டப்படி செல்லாதா? தமிழக அரசு விளக்கம்
அமீர் - பாவனி ஜோடி கலப்பு திருமணம் செய்துகொண்ட நிலையில், அந்த திருமணம் செல்லாது என தகவல் பரவியதால் அதுபற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Amir Pavani Love Marriage : பிக் பாஸ் என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் காதலித்து அண்மையில் திருமணம் செய்துகொண்டவர்கள் தான் அமீர் - பாவனி. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலித்தவர் ஏராளம். ஆரவ் - ஓவியா, மஹத் - யாஷிகா, கவின் - லாஸ்லியா, ஷிவானி - பாலாஜி முருகதாஸ் என பிக் பாஸ் காதலர்கள் நிறைய பேர் இருந்தாலும், அவர்களில் காதல் சக்சஸ் ஆகி திருமணம் செய்துகொண்ட முதல் ஜோடி அமீர் - பாவனி தான். இவர்கள் இருவரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது காதலித்தனர்.
அமீர் பாவனி
அமீர் பாவனி திருமணம்
அமீர் - பாவனி ஜோடி கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 20ந் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் பிரபலங்களான பிரியங்கா தேஷ்பாண்டே, ராஜு, சிபி, மதுமிதா ஆகியோர் கலந்துகொண்டனர். பாவனிக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். அவர் முதல் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அமீர் மீது காதல் வயப்பட்டு அவரை கரம்பிடித்தார் பாவனி.
இதையும் படியுங்கள்... திருமணத்திற்கு அழைக்காத அமீர்; பங்கம் செய்த ஐஷு தந்தை!
அமீர் பாவனி திருமண புகைப்படம்
அமீர் - பாவனி திருமணம் செல்லாதா?
அமீர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர், அதேபோல் பாவனி ஹிந்து மதத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் கலப்பு திருமணம் செய்தால் அவர்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்றும் இதனால் அவர்கள் திருமணம் செல்லாது எனவும் சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டி வைரலான நிலையில், அதுபற்றி தமிழக அரசே விளக்கம் அளித்துள்ளது.
அமீர் பாவனி கல்யாணம்
தமிழக அரசு விளக்கம்
அமீர் - பாவனி ஆகியோரது திருமணம் செல்லுபடி ஆகாது என பயில்வான் ரங்கநாதன் கூறியதாக ஒரு வீடியோ வைரல் ஆனது. இதுகுறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், இருவேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்துகொள்ள சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதி உள்ளதாகவும், அதில் வகுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில், இருவேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ஜாம் ஜாம்னு நடந்த அமீர் - பாவனி ஜோடியின் திருமணம் - வைரலாகும் போட்டோஸ்