பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அமீரை ஆரம்ப காலத்தில், ஆதரித்து ஆளாக்கியது அஷ்ரப் குடும்பம் தான்.
அமீர் இன்று ஒரு நடன இயக்குனராக இருப்பதற்கு முக்கிய காரணம், அவரை வளர்த்து ஆளாக்கிய பிக்பாஸ் ஐஷுவின் பெற்றோர் என்பது அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் தெரியவந்தது.
சிறுவயதிலேயே தன்னுடைய அம்மா இழந்து, அப்பாவின் ஆதரவும் இன்றி தவித்து வந்த இவருக்கு, உணவு - இடம் கொடுத்து அவருடைய வளர்த்து ஆளாகினர்.
மேலும் அவரின் நடன திறமையை கண்டறிந்து, நடன நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பின்னர் இவருடைய வாழ்க்கை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.
அதே நேரம் பாவனியின் வருகையால் ஐஷுவின் குடும்பத்தினருக்கும், அமீருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது.
ஒரு கட்டத்தில் அமீர், ஐஷுவின் தந்தை அஷ்ரப் குடும்பத்தோடு பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்கும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்நிலையில் திருமணத்திற்கு கூட அழைக்காததை எண்ணி அஷ்ரப் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் நீங்கள் ரோட்டில் போகும்போது நாய் ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தால் அதை காப்பாற்றுங்கள். அதை பேணி பாதுகாத்து வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
அதே இடத்தில் மனிதன் இருந்தால் தயவு செய்து கண்டு கொள்ளாமல் போய்விடுங்கள். அவனை வீட்டுக்கு கூட்டி வந்து கவனிக்க வேண்டும் என்று ஆசை படாதீர்கள்.
இதற்கு நான் மிகப்பெரிய உதாரணம் என பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் அஷரப் நேரடியாக அமீரை தாக்கும் விதத்தில் பதிவிட்டு இருப்பதாக பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.