தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் 'சச்சின்'.
இந்த படத்தை இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கிய நிலையில், கலைப்புலி தாணு வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருந்தார்.
மேலும் இப்படத்தில் ஜெனிலியா தளபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பாய்ஸ் படத்திற்கு பின்னர் நடிகை ஜெனிலியா நடித்த இரண்டாவது தமிழ் திரைப்படம் இதுவாகும்.
இந்த படத்தில் மிகவும் துறுதுறு பெண்ணாக ஜெனிலியா நடித்திருந்தார்.
இவரது ஷாலினி கதாபாத்திரமும் அதிக அளவில் ரசிக்கப்பட்டது.
இந்த படத்தில் ஜெனிலியாவின் நடிப்பை தவிர, அவரது டயலாக் டெலிவரி போன்றவை அதிகம் கவனிக்கப்பட்டது.
அதன்படி இந்த படத்தில் ஜெனியாவுக்கு குரல் கொடுத்தவர் பிரபல நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் சச்சின் படத்தில் ஜெனிலியாவும் குரல் கொடுத்தவர் நடிகை கனிகா தான்.
இந்த தகவலை இயக்குனர் ஜான் மகேந்திரன் அண்மையில் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் கனிகா ஒரு நடிகை என்பதால்... ஜெனிலியாவின் சின்ன சின்ன நுணுக்கமான பேச்சையும் கவனித்து குரல் கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.
சச்சின் ரீ-ரிலீஸ் வசூல் : சூப்பரா? சுமாரா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
பழனி படிக்கட்டு மாதிரி ‘Six Pack’ வைத்திருக்கும் டாப் 10 தமிழ் ஹீரோஸ்!
18 வயதாகும் முன்பே ஹீரோயின் ஆன டாப் 10 தமிழ் நடிகைகள்!
விண்டேஜ் லுக்கில் கலக்கும் ‘ரெட்ரோ’ நாயகி பூஜா ஹெக்டே!