MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆஞ்சியோ செய்த ஒரே வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மனோபாலா! திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்!

ஆஞ்சியோ செய்த ஒரே வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மனோபாலா! திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்!

கடந்த 10 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனோபாலா, உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : May 03 2023, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில், காமெடி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவராக திகழ்ந்த மனோபாலா உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25
<p>manobala</p>

<p>manobala</p>

69 வயதாகும், மனோபாலா தமிழ் சினிமாவில், 1979-ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கியவர். மேலும் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, 1982-ம் ஆண்டு ஆகாய கங்கை என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். 

Breaking : பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்

35

சுமார் 15 படங்களுக்கு மேல் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ள மனோபாலா, சதுரங்க வேட்டை போன்ற சில படங்களையும் தயாரித்துள்ளார். இயக்குனர் தயாரிப்பாளர் என்பதை தாண்டி, தற்போதைய ரசிகர்கள் மத்தியில் காமெடி நடிகராக தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். 

45

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் இருந்த மனோ பாலாவை பல பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர். 

ஆஸ்கருக்கு போகும் தங்கலான்...! விக்ரம் - பா.இரஞ்சித் கூட்டணியின் தரமான சம்பவம் லோடிங்

55

ஆஞ்சியோ சிகிச்சைக்கு பின்னர், உடலநலம் தெரிய மனோ பாலா... மீண்டும் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 10... 15... தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்த மனோபாலா உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கள்ள உறவில் சரவணன்; மீனாவிடம் கதறி அழுத மயில்... கதிரிடம் திட்டுவாங்கிய ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
Recommended image2
ஒரே மேடையில் ஐஸ்வர்யா ராய் - நீட்டா அம்பானி ஆட்டம்.! சல்மான் கான் பாட்டிற்கு செம டான்ஸ்!
Recommended image3
பார்த்திபன் இப்படி சொல்லிட்டாரே... முட்டாள்தனமான பேச்சு என திரிஷா பதிலடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved