- Home
- Cinema
- கோவாவில் களைகட்டிய 90ஸ் பிரபலங்களின் ரீ-யூனியன்; ஷங்கர் முதல் மீனா வரை இத்தனை பேர் கலந்துகொண்டார்களா?
கோவாவில் களைகட்டிய 90ஸ் பிரபலங்களின் ரீ-யூனியன்; ஷங்கர் முதல் மீனா வரை இத்தனை பேர் கலந்துகொண்டார்களா?
90களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் மீண்டும் சங்கமித்த அழகிய தருணங்கள் அடங்கிய புகைப்பட தொகுப்பை பார்க்கலாம்.

90 Actors Reunion in Goa
90ஸ் தமிழ் சினிமாவிற்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு விஜய், அஜித், சூர்யா, ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன், மீனா, பிரபுதேவா போன்ற பல திறமைவாய்ந்த கலைஞர்கள் கிடைத்தார்கள். அந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்களுக்கு இப்போதும் ரசிகர்கள் மத்தியில் மவுசு இருக்கிறது.
90ஸ் பிரபலங்களின் ரீ-யூனியன்
1990-களில் தான் தமிழ் சினிமாவுக்கு ஏராளமான வெற்றிப் படங்களும் கிடைத்தன. தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றதே இந்த காலகட்டம் தான். இதனால் 90ஸ் பிரபலங்கள் மீது ரசிகர்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு. 90களில் கோலோச்சிய நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் ஒன்றாக சங்கமித்த அழகிய தருணம் அரங்கேறி இருக்கிறது.
யார்... யார் கலந்துகொண்டார்கள்?
நடிகைகள் மீனா, சங்கவி, சங்கீதா, சிம்ரன், மாளவிகா, ரீமா சென், சிவரஞ்சனி, மகேஷ்வரி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், பிரபுதேவா, ஜெகபதிபாபு, இயக்குனர்கள் ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கோவாவில் நடைபெற்ற 90ஸ் ரீ-யூனியனில் கலந்துகொண்டனர்.
மேட்சிங் மேட்சிங் ஆடையில் ஜொலித்த பிரபலங்கள்
அப்போது அனைவரும் ஒன்றாக சேர்ந்து அங்கு படகு சவாரி மேற்கொண்டிருக்கிறார்கள். படகில் பயணித்தபடி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படகு சவாரியின் போது அனைவரும் மேட்சிங்... மேட்சிங் உடையணிந்திருக்கிறார்கள்.
நினைவுகளை பகிர்ந்த பிரபலங்கள்
இந்த சந்திப்பின் போது தங்களது பழைய ஷூட்டிங் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி படகில் ஜாலியாக ஆடிப்பாடி வைப் செய்திருக்கிறார்கள். இதில் சங்கவி, சிவரஞ்சனி போன்ற 90ஸ் நடிகைகளை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
நைட் பார்ட்டி
அதேபோல் கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களுக்காக பிரத்யேக பார்ட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் மாடர்ன் உடையில் வந்து கலந்துகொண்ட நாயகிகள், ஆடிப்பாடி மகிழ்ந்ததோடு, இந்த அழகிய தருணத்தை கொண்டாடும் விதமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.