MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாலியல் சீண்டல்; கேரள நடிகைகள் அடுக்கும் புகார்கள் - குரல் கொடுக்காமல் கப் சிப்னு இருக்கும் தமிழ் ஹீரோஸ்!!

பாலியல் சீண்டல்; கேரள நடிகைகள் அடுக்கும் புகார்கள் - குரல் கொடுக்காமல் கப் சிப்னு இருக்கும் தமிழ் ஹீரோஸ்!!

கேரளாவில் மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருக்கின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 31 2024, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Hema committee report

Hema committee report

ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் புயலை கிளப்பி இருக்கிறது. அங்கு பெண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றியும் அதை செய்த முன்னணி நடிகர்கள் யார் யார் என்பது பற்றியும் பகீர் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், சித்திக் ஆகியோர் பெண்கள் மீது அத்துமீறியதாக அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டதால் காவல்நிலையங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Tamil Actors

Tamil Actors

கேரளாவில் தமிழ் சினிமா நடிகர்களுக்கு அதிக மவுசு உள்ளது. அங்கு விஜய், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் கேரளாவின் ஒரு அங்கமாக இருக்கும் தமிழ் சினிமா நடிகர்கள் இந்த ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரம் குறித்து வாயே திறக்காமல் மெளனம் காத்து வருவது சந்தேகத்தை கிளப்பி வருகிறது. கேரளாவில் படம் ஓடினால் மட்டும் போதுமா, அங்குள்ள பிரச்சனைக்கு குரல் கொடுக்க மாட்டீர்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

35
Malayalam Film industry

Malayalam Film industry

வழக்கமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் நடிகர் சூர்யா, இந்த விவகாரத்தில் வாயே திறக்காமல் இருக்கிறார். அதேபோல் கேரள மக்களின் செல்லப்பிள்ளையாக கொண்டாடப்படும் நடிகர் விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கிறார். அரசியல்வாதியான பின்னரும் விஜய் இந்த விவகாரத்தில் குரல் கொடுக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... கேரவனில் கேமரா; எல்லா நடிகைகளுடைய டிரஸ் மாத்துற வீடியோ வச்சிருக்காங்க - ராதிகா சொன்ன பகீர் சம்பவம்

45
Radhika sarathkumar

Radhika sarathkumar

நடிகை ராதிகாவும் சமீபத்தில் ஏசியாநெட்டுக்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டியில் அங்கு ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றபோது கேரவனில் கேமரா வைத்திருக்கும் தகவல் தனக்கு தெரியவந்ததாகவும், அதில் ஏராளமான நடிகைகளை சிலர் வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் ராதிகா கூறி இருந்தார். அதேபோன்று தமிழ்நாட்டிலும் ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், இதற்கு முன்னணி நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் ராதிகா வலியுறுத்தி இருந்தார்.

55
vishal

vishal

தமிழ்நாட்டில் நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக இருக்கும் நடிகர் விஷால், ஹேமா கமிட்டி போல் தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்களை விசாரிக்க ஒரு குழு இன்னும் 10 நாட்களில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன் மூலம் தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் வெளிச்சத்துக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை; நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு நடிகை புகார்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vishwanath And Sons: கருப்பு ஃபீவர் அடங்குவதற்குள் சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி வந்தாச்சு
Recommended image2
Ilaiyaraaja : இளையராஜாவை காப்பாற்ற பாடகி ஜானகி செய்த உதவி… பலருக்கும் தெரியாத ரகசியம்!
Recommended image3
Peddi First Review : ராம் சரணின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? பெத்தி முதல் விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved