கேரவனில் அந்தச் சம்பவம் நடந்துச்சு; என்னால அழக்கூட முடியல: நடிகை தமன்னா வேதனை!
Tamannaah Caravan incident: ஷூட்டிங் சமயத்தில் கேரவனில் நடந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்து நடிகை தமன்னா பேசியுள்ளார். அந்தச் சம்பவத்தால் மனம் வருந்திய தமன்னா, தன்னைத் தானே தேற்றிக்கொண்டு மீண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Tamannaah Bhatia
கேரவனில் இருக்கும்போது நடந்த விரும்பத் தகாத சம்பவம் பற்றி நடிகை தமன்னா பகிர்ந்துகொண்டிருக்கிறார். அந்தச் சம்பவத்தில் இருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் எனவும் தமன்னா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Tamannaah Bhatia Latest News
தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அஜித், விஜய் உள்பட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபத்தில் பாலிவுட் பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வருகின்றன. வெப் சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
Tamannaah Bhatia Interview
இந்நிலையில், அவர் ஷூட்டிங்கின்போது நடந்த ஒரு விரும்பத் தகாத நிகழ்வு பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். "நான் கேரவனில் இருந்தபோது அந்த சம்பவம் நடந்தது. நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் கண்கள் கலங்கிவிட்டன. அப்போது நான் நடிப்பதற்குத் தயாராக முழு மேக்கப்புடன் இருந்தேன். அதனால் அப்போது என்னால் அழக்கூட முடியவில்லை" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Tamannaah Bhatia Photos
"எனக்கு நானே தைரியம் சொல்லிக்கொண்டேன். அந்தக் கடினமான உணர்வில் இருந்து மெல்ல மாறினேன். பிறகு என்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது" என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
Tamannah Bhatia Movies
தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சிக்கந்தர் கா முகாதுர். இது நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் வெளியானது. ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்புகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஸ்ட்ரீ-2 படத்தில் வரும் ஆஜ் கி ராட் பாடல் ரசிர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Tamannaah Bhatia Web Series
தமன்னா இன்னும் பல படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். தற்போது ஒடேலா 2 படத்தில் சிவ சக்தி என்ற கேரக்டரில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அசோக் தேஜா இயக்குகிறார். ஆனால், தமன்னா தமிழில் நடித்து நீண்ட காலம் ஆகிவிட்டது. கடைசியாக, தமன்னா நடிப்பில் வெளியான படம் 'அரண்மனை 4' தான்.