Taapsee interview : சம்பளம் மட்டுமே குறிக்கோள்..சினிமாவை விட்டு விலகும் ஆடுகளம் நாயகி?
Taapsee interview : டாப்ஸி சினிமாவில் இருந்து விலக போவதாக வெளியான செய்தி குறித்து சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் மிக சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.

taapsee
பிரபல தமிழ் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்தில் ஆங்கிலோ இந்தியனாக டாப்ஸி நடித்திருப்பார்.
taapsee
இதையடுத்து ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் வாயிலாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.
taapsee
இந்தி, தெலுங்கை தொடர்ந்து இந்தியில் டாப்ஸி பாலிவுட்டில் கால் பதிக்க துவங்கிய 6 இந்தி படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக பாலிவுட்டின் ராசியான ஹீரோயினாக மாறிவிட்டார்.
taapsee
தற்போது டாப்ஸி நடிப்பில் ‘ரேஷ்மி ராக்கெட்’ திரைப்படம் தயாராக உள்ளது. இந்தியில் உருவாகும் இந்த படத்திற்கு தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி கதை எழுதியுள்ளார். இந்த படத்தை ஆகார்ஷ் குரானா இயக்கியுள்ளார்.
taapsee
பாலிவுட்டில் படு வேகமாக வளர்ந்து வரும் நாயகியாக மாறியுள்ள இவர். இதன்காரணமாக இதுவரை 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த டாப்ஸி, அதனை ரூ.8 கோடியாக உயர்த்திவிட்டாராம்.
taapsee
இந்நிலையில் டாப்ஸி படஉலகை விட்டு விலக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேட்டி ஒன்றில் மிக சுவாரஸ்யமாக பேசியுள்ளார் டாப்ஸி.
taapsee
பேட்டியில் பேசிய டாப்ஸி, வாழ்க்கை முழுவதும் சினிமாவில் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை.அதற்கான தேவையான பணத்தினை சம்பாதித்து விட்டு அதன்பின் ஓய்வு எடுக்க வேண்டும் என்று எண்ணம் எப்போது தோன்றுகிறது அப்போது தான் சினிமாவை விட்டு விலகுவேன் என கூறியுள்ளார்.
taapsee
அதோடு ஆடம்பர வாழ்க்கை எனக்கு சுத்தமாக பிடிக்காதது. ஒரு பொருளை பலமுறை மாற்ற எனக்கு பிடிக்காது. நான் வாங்கிய சம்பளத்தில் வாங்கப்பட்ட கார் இன்னும் நான் பயன்படுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.