MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரிந்து சென்ற மனைவிக்காக... டி.ராஜேந்தர் ஃபீல் பண்ணி எழுதிய பாட்டு - கிளாசிக் ஹிட்டான கதை தெரியுமா?

பிரிந்து சென்ற மனைவிக்காக... டி.ராஜேந்தர் ஃபீல் பண்ணி எழுதிய பாட்டு - கிளாசிக் ஹிட்டான கதை தெரியுமா?

டி.ராஜேந்தர் தன்னைப் பிரிந்து சில நாட்கள் அமெரிக்கா சென்றிருந்த தன்னுடைய மனைவி உஷாவுக்காக ஒரு பாடலை ஃபீல் பண்ணி எழுதி இருக்கிறார். அந்தப் பாடல் பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 11 2026, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
T Rajendar Song Secret
Image Credit : X

T Rajendar Song Secret

தமிழ் சினிமாவில் இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். இன்றைய ஜென் சி தலைமுறையினருக்கு இவரை சிம்புவின் தந்தையாக தான் தெரியும். ஆனால் 1980-களில் தமிழ் சினிமாவில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தன. ஒரு தலை ராகம் படம் மூலம் இவரின் திரைப்பயணம் ஆரம்பமானது. அடுக்கு மொழியில் வசனம் பேசி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு தனித்துவமான ஹீரோவாக இடம்பிடித்தார் டி.ஆர். இவர் இயக்கிய உயிருள்ளவரை உஷா திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு பின் தற்போது ரீ-ரிலீஸ் ஆகிறது.

24
உயிருள்ள வரை உஷா ரீ-ரிலீஸ்
Image Credit : X

உயிருள்ள வரை உஷா ரீ-ரிலீஸ்

காதலர் தின ஸ்பெஷலாக இப்படம் பிப்ரவரி 13ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படம் கடந்த 1983-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் டி.ராஜேந்தர் உடன் சரிதா, நளினி, ராதா ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இதில் செயின் ஜெயபாலாக டிஆர் நடித்திருந்தார். இப்படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி, அதற்கு இசையமைத்ததும் டி.ராஜேந்தர் தான். அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

Related Articles

Related image1
Now Playing
நான் ஒரு இந்தியன்! அப்புறம் தான் தமிழன்! டி.ராஜேந்தர் உணர்ச்சி பொங்க பேச்சு!
Related image2
ஆள விடு சாமி; 16 மணிநேரம் பாடாய் படுத்திய டி.ராஜேந்தர்.. தப்பி ஓடிய எஸ்.பி.பி! எந்த பாட்டுக்கு தெரியுமா?
34
மனைவிக்காக டி.ஆர் எழுதிய பாட்டு
Image Credit : Google

மனைவிக்காக டி.ஆர் எழுதிய பாட்டு

உயிருள்ளவரை உஷா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை, டி.ராஜேந்தர் தன்னுடைய மனைவியை பிரிந்த வேதனையோடு எழுதி இருக்கிறார். அப்படம் உருவான சமயத்தில் தான் டி.ராஜேந்தருக்கு கல்யாணம் ஆகி இருந்தது. அவர் தன்னுடைய காதலியான உஷாவையே திருமணம் செய்துகொண்டார். கல்யாணம் ஆன புதிதில் அவருடைய மனைவி உஷா, அவரைப் பிரிந்து சில நாட்கள் அமெரிக்கா சென்றிருந்தாராம். அவர் பிரிந்து சென்ற சோகத்தில் டி.ராஜேந்தர் சில வரிகளை எழுதி இருக்கிறார். கங்கைக் கரை காத்தே நில்லு, மங்கை தனை பார்த்தால் சொல்லு என எழுதி இருக்கிறார்.

44
வைகை கரை காற்றே நில்லு பாடல் உருவான விதம்
Image Credit : our own

வைகை கரை காற்றே நில்லு பாடல் உருவான விதம்

மனைவிக்காக எழுதிய இந்த பாடலை படத்தில் வைக்க வேண்டும் என சொன்னதால், அதில் கங்கை கரை என எழுதியதை வைகை கரை என மாற்றி அந்தப் பாடலை கே.ஜே.யேசுதாஸை பாட வைத்தாராம் டி.ராஜேந்தர். அவரின் குரல் அப்பாடலுக்கு மற்றுமொரு சிறப்பம்சமாக அமைந்தது. மனைவிக்காக டி.ராஜேந்தர் ஃபீல் பண்ணி எழுதிய அந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளதற்கு அவர் எழுதிய உணர்வுப்பூர்வமான வரிகளும் ஒரு காரணம். இந்த கதையை சமீபத்திய பேட்டியில் டி.ராஜேந்தர் கூறி இருந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
தமிழ்ப் பாடல்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
MGR waiting for SPB: எஸ்.பி.பி-க்காக மொத்த கோலிவுட்டையே காத்திருக்க வைத்த எம்.ஜி.ஆர்! புதுமுகப் பாடகருக்காக எம்.ஜி.ஆர் செய்த 'மாஸ்' காரியம்!
Recommended image2
Music: இசைஞானியையே சோதித்த 'அந்த' பாடல்! 8 மணி நேர போராட்டத்திற்கு பின் கிடைத்த மாஸ் ஹிட்!
Recommended image3
1000 கோடி வசூல் அள்ளிய முதல் தமிழ் இயக்குநர்.... விஜய்க்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் - யார் இந்த பிரபலம்?
Related Stories
Recommended image1
Now Playing
நான் ஒரு இந்தியன்! அப்புறம் தான் தமிழன்! டி.ராஜேந்தர் உணர்ச்சி பொங்க பேச்சு!
Recommended image2
ஆள விடு சாமி; 16 மணிநேரம் பாடாய் படுத்திய டி.ராஜேந்தர்.. தப்பி ஓடிய எஸ்.பி.பி! எந்த பாட்டுக்கு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved