12 பிரபலங்களுடன் டேட்டிங்; 50 வயது வரை திருமணம் செய்யாமல் தனிமையில் வாழும் நடிகை!
ஒரு காலத்தில் பாலிவுட் திரையுலகை கலக்கியவர் அந்த நட்சத்திர நடிகை 50 வயதை நெருங்கிவிட்டார். திரையுலகில் இதுவரை 12 பேருடன் டேட்டிங் செய்துள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை அவர் யார் தெரியுமா?

திரையுலகில் அந்த ஒரு சர்ச்சியிலும் சிக்காமல் தப்பித்த நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே. 80 காலகட்டத்தை சேர்ந்த நடிகைகள் பெரும்பாலும், நடிகர்களையோ அல்லது தொழிலதிபர்களையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டனர். 90-களுக்கு பின்னர் நடிகைகள் திருமணத்திற்கு பின்னரும் நடிக்க துவங்கினார்கள். ஆனால் தற்போது காலம் மாறி விட்டதால் திருமணம் ஆகி, விவாகரத்து பெற்று பிரிந்த பின்னரும் கூட சில நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
அதே போல் ஒரு சில பாலிவுட் நடிகைகள் தொடர்ந்து, காதல் சர்ச்சைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நடிகையைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
சுஷ்மிதா சென்
அந்த நடிகை வேறு யாருமல்ல, பாலிவுட்டின் மூத்த அழகி சுஷ்மிதா சென். இவர் ஹைதராபாத்தில் 1975 இல் பிறந்தார். மாடலாக தனது வாழ்க்கையை மிக இளம் வயதிலேயே தொடங்கினார். 1994 இல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். 1996 இல் 'தஸ்தக்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
12 நடிகர்களுடன் டேட்டிங்
பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், தனது வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கண்டார். 50 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் சுஷ்மிதா சென். கிட்டத்தட்ட 12 நடிகர்களுடன் டேட்டிங் செய்ததாக செய்திகள் பரவி வருகின்றன. அதில் ரகுமான் சால், ரன்தீப் ஹூடா, விக்ரம் பட் போன்ற பெயர்கள் அடிபடுகின்றன. சமீபத்தில் லலித் மோடியுடன் சுற்றித் திரிந்த அவர், பின்னர் பிரிந்து விட்டார்.
சுஷ்மிதா சென் டேட்டிங்
சுஷ்மிதா சென் சுதந்திர சிந்தனையுள்ள நடிகை. திருமணம் என்பது அவரது எண்ணத்திலேயே இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல், டேட்டிங் மூலம் காலத்தைக் கழித்த மூத்த அழகி, இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதே போல் தன்னைக் காட்டிலும் இளையவர்களுடன் கூட சுஷ்மிதா சென் டேட்டிங் செய்த சம்பவங்களும் உண்டு.
7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள்
தனக்குப் பிடித்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழும் சுஷ்மிதா சென், சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். தனக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அப்டேட்டையும் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இன்ஸ்டாகிராமில் சுஷ்மிதாவிற்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.