விருது வழங்கும் மேடையை தொட்டு வணங்கிய சூர்யா...வைரலாகும் போட்டோஸ் இதோ!
விருது பெறுவதற்கு மேடைக்குச் சென்ற சூர்யா, விழா மேடையை தொட்டு வணங்கி சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகில் வாரிசு நடிகர் என்ற அறிமுகத்தோடு காலடி எடுத்து வைத்திருந்தாலும் தற்போது தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டு பாலிவுட் வரை பிரபலமாகி விட்டார் நடிகர் சூர்யா. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவரின் நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் உருவாகி இருந்தது.
தற்போது வாடிவாசல், வணங்கான் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. இதில் வாடிவாசல் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சமீபத்தில் மாஸ் காட்டிய விக்ரம் படத்தில் கிளைமேக்ஸ் த்ரில்லராக ரோலக்ஸ் வேடத்தில் வந்தது அசத்தியிருந்தார். மேலும் சூர்யா தற்போது சூரரைப் போற்று ஹிந்தி ரீமேகலும் சிறப்பு தோற்றத்தில் வர உள்ளாராம்.
மேலும் செய்திகளுக்கு...மீண்டும் குட்டையை குழப்பும் ஆதி...ஜெசியை புறம்தள்ள புதிய திட்டம்!
Jyothika
இந்நிலையில் இவருக்கு நேற்று சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ஏர்டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியது. சுவாரசிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இதனை சுதா கொங்கார ரெட்டி இயக்கி இருந்தார். இந்த படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்கிற கதாபாத்திரத்தில் சூர்யா நாயகனாக தோன்றியிருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையொட்டி இந்த படம் ஓடிடியில் வெளியாகி இருந்தது. ஆனால் திரையரங்கிற்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதனால் அப்போது திரையரங்கு உரிமையாளர்கள் படத்திற்கு பலத்த எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
மேலும் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாது எனவும் கூறினர். ஆனால் ஓடிடி வெளியானது முதலே படம் பல வரவேற்புகளை பெற்று வந்தது. கடந்த ஜூன் ஜூலை மாதம் இந்த படத்திற்கு 5 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் இப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு...காதலிக்காக அப்பாவை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிய கோபி..கைகூப்பை கெஞ்சும் பாக்கியா!
சிறந்த படத்திற்கான விருதை 2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா, சிறந்த நடிகைக்கான விருதை அபிராமி பாலமுரளி, சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா, சிறந்த திரைக்கதைக்கான விருதை சுதா கொங்காரா, சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை ஜி.வி பிரகாஷ் பெற்றுக் கொண்டனர். புது தில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கைகளால் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
suriya
விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா, ஜோதிகாவின் புகைப்படங்கள் வைரலாக பரவி வந்தன. அதோடு அவர்களுக்கு பாராட்டுகளும் குவிந்தது. விருதுகளை பெற்றுக் கொண்ட கையோடு சிவகுமார் மற்றும் அவரது மனைவியின் கழுத்தில் மடலை அணிவித்து தன் பிள்ளைகளில் கைகளில் சான்றிதழை வழங்கி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர் சூர்யாவும், ஜோதிகாவும். மேலும் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார் சூர்யா. இந்த நிலையில் விருது பெறுவதற்கு மேடைக்குச் சென்ற சூர்யா, விழா மேடையை தொட்டு வணங்கி சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.