- Home
- Cinema
- விஜய், அஜித்தை மிஞ்சிய சூர்யா..! ஓடிடியில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான கங்குவா - அதுவும் இத்தனை கோடியா..!
விஜய், அஜித்தை மிஞ்சிய சூர்யா..! ஓடிடியில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான கங்குவா - அதுவும் இத்தனை கோடியா..!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ஓடிடி உரிமையை பெருந்தொகைக்கு விற்பனை செய்துள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை, வீரம், விஸ்வாசம் போன்ற கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த சிவா தான் இப்படத்தை இயக்கி வருகிறார். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
கங்குவா படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. தற்போது கோடைக்கானலில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடிகர் சூர்யா நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இதனை 10 மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதையும் படியுங்கள்... கமலின் ஆழ்வார்பேட்டை கேங்கில் அங்கமாக இருந்த மனோபாலா... கடைசி வரை நிறைவேறாமல் போன அவரின் நீண்ட நாள் ஆசை
கங்குவா படத்தின் ஷூட்டிங் ஒருபுறம் பிசியாக நடந்து வரும் நிலையில், மறுபுறம் இப்படத்தின் பிசினஸும் படுஜோராக நடந்து வருகிறது. அதன்படி கங்குவா படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதன்படி கங்குவா படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.80 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாம்.
அதுவும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு மட்டுமே இத்தனை கோடி கொடுத்து ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். தமிழில் இவ்வளவு தொகைக்கு விற்கப்படும் முதல் திரைப்படம் கங்குவா என்று ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு சூர்யா படத்தின் ஓடிடி உரிமை விற்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... மனோ பாலாவுக்கு என்ன பிரச்சனை? மரணத்திற்கான காரணம் தெரியுமா... வெளியான ஷாக்கிங் தகவல்!