- Home
- Cinema
- Etharkkum Thunindhavan :ரூ.100 கோடியை கடந்தது எதற்கும் துணிந்தவன் வசூல்... பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் சூர்யா
Etharkkum Thunindhavan :ரூ.100 கோடியை கடந்தது எதற்கும் துணிந்தவன் வசூல்... பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் சூர்யா
Etharkkum Thunindhavan : நடிகர் சூர்யாவின் கெரியரில் வேகமாக ரூ.100 கோடி வசூல் ஈட்டிய படமாக எதற்கும் துணிந்தவன் அமைந்துள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

சூர்யா - பாண்டிராஜ் கூட்டணி
சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், இளவரசு, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார்.
கதைக்களம்
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு தேவையான சமூக கருத்தும் படத்தில் உள்ளதால், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமைந்துள்ளது.
ரூ.100 கோடி வசூல்
மேலும் எதற்கும் துணிந்தவன் படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வசூலை ஈட்டி உள்ளது. இந்நிலையில், இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
சூர்யா சாதனை
நடிகர் சூர்யாவின் கெரியரில் வேகமாக ரூ.100 கோடி வசூல் ஈட்டிய படமாக எதற்கும் துணிந்தவன் அமைந்துள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. தற்போது வார நாட்களிலும் இப்படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Radhe shyam : எதிர்பார்த்த வசூல் இல்லை... பாக்ஸ் ஆபிஸில் காத்துவாங்கும் ராதே ஷ்யாம்! கலக்கத்தில் RRR படக்குழு