கூல் அப்டேட்..சூர்யா..பாலா கூட்டணியில் இணையும் வாரியர் நாயகி ?
நந்தா படத்தை இயக்கிய பாலா கூட்டணியில் சூர்யா புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்தப்படத்தின் அப்டேட் ஒன்றொன்றாய் வெளியாகியுள்ளது.

Etharkkum Thunindhavan
எதற்கும் துணிந்தவன் :
ஜெய் பீம் வெற்றியை தொடர்ந்து சூர்யா தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனரான பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். எதற்கும் துணிந்தவன் என்கிற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) நடித்துள்ளார். இவர்களுடன் சரண்யா, சத்தியராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
Etharkkum Thunindhavan
குடும்ப ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் சூர்யா :
சூர்யா நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமர்ஷியல் ஹீரோவாக சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமைந்துள்ளது. குடும்ப ரசிகர்கள் கூடி ரசித்து வருகின்றனர். சூர்யாவின் முந்தைய படங்களின் வெற்றியை இந்த படம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
Etharkkum Thunindhavan
மீண்டும் வக்கீலாக சூர்யா :
நாயகன் சூர்யா, தென்னாடு பகுதியில் வக்கீலாக இருக்கிறார். பெற்றோர்களாக சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் நடித்துள்ளனர். அதேபோல் வடநாடு பகுதியை சேர்ந்த வில்லன் வினய் அசத்தியுள்ளார். இந்தப்படம் தென்னாடு மற்றும் வடநாடு ஊர்காரர்களிடையே சில ஆண்டுகளாக பிரச்சனையை தீர்க்கிறார் சூர்யா.
மேலும் செய்திகளுக்கு..Etharkkum Thunindhavan review : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பாஸா? பெயிலா? - முழு விமர்சனம் இதோ
Etharkkum Thunindhavan
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் :
தென்னாட்டில் இளம் பெண்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். சில தற்கொலை சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இந்த சம்பவங்களுக்கு பின்னனியில் ஒரு பெரிய சதி செயல் இருப்பதை சூர்யா கண்டறிகிறார். அதோடு வில்லன் வினய் அங்குள்ள பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதையும் கண்டறியும் சூர்யா வில்லனை தோற்கடிப்பதே இதன் கதைக்களம்.
vadivasal
வெற்றி மாறனின் வாடிவாசல் :
எதற்கும் துணிந்தவனை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா வடிவாசலில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்கவிதம் பாலாவுடன் கூட்டணி அமைத்தார் சூர்யா.
suriya - bala
பாலா கூட்டணியில் மீண்டும் சூர்யா :
கடந்த 2001 ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான 'நந்தா' சூர்யாவின் சினிமா வாழ்வை புரட்டி போட்டது. காதல் இளைஞனாக வலம் வந்த சூர்யா ஆக்ஷன் ஹீரோவானது இந்தப்படத்திற்கு பின்னரே...இதைத்தொடர்ந்து பிதாமகனும் சூர்யாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது.. இந்நிலையில் இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த படங்கள் பிளாப் ஆனதால் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக மற்ற படங்களுக்கு முன்னர் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார் சூர்யா.
suriya - bala
சூர்யாவின் புதிய படப்பிடிப்பு :
சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் கன்னியாகுமாரி உள்ளிட்ட இடங்களில் நடத்த ப்படவுள்ளது. அதோடு பிதாமகன் பட ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் பழைய கூட்டணியில் இணைவதாகவும் கூறப்படுகிறது...
suriya - bala
நாயகி தேர்வு :
பாலா, சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோயினி வேட்டை விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியாக தி வாரியார் பட நாயகி கீர்த்தி ஷெட்டி நடிக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.