MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

Suriya and Jyotika Get Married Again : நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும், தங்களது மகன் தேவ் மற்றும் மகள் தியா முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 16 2026, 07:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Suriya Jyotika Celebrate 20 Years of Love
Image Credit : intsgram/Suriya

Suriya Jyotika Celebrate 20 Years of Love

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர ஜோடியான சூர்யா மற்றும் ஜோதிகா, கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தங்களின் 20வது திருமண நாளை கொண்டாடினர். காதலித்து திருமணம் செய்து கொண்டு, இரண்டு தசாப்தங்களாக இணைந்து பயணித்து வரும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தங்களின் 20வது திருமண நாளை வழக்கமான முறையில் கொண்டாடாமல், சற்று வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர் சூர்யா–ஜோதிகா. இதுதொடர்பான அழகான வீடியோவை இருவரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் தற்போது பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Suriya : குஜிலிமஸ்து கன்ஃபார்ம்... தீபாவளி ரேஸில் முதல் ஆளாக குதித்த ‘சீன்’ சூர்யா - தெறிக்கவிடும் டீசர் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம்!
Image Credit : intsgram/Suriya

மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம்!

வீடியோவில் சூர்யா தனது மகன் தேவ் உடனும், ஜோதிகா தனது மகள் தியாவுடனும் இணைந்து திருமண விழா போன்று தோன்றும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். சூர்யா கோட் சூட்டிலும், ஜோதிகா அழகிய பிரைடல் கவுனிலும் காட்சியளிக்கின்றனர். வெள்ளை நிற ஆடைகளில் மணமகன் மற்றும் மணமகள் போல இருவரும் தேவாலயத்தில் திருமண உறுதிமொழிகளை மீண்டும் எடுத்துக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தங்களது குழந்தைகளையும் இந்த சிறப்பு தருணத்தில் இணைத்துக் கொண்டிருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Related image1
சூர்யா - ஜோதிகா மகளா இது? அப்போ குழந்தை நட்சத்திரம்... இப்போ மும்பைல பெரிய லாயர்!
Related image2
சூர்யாவிடம் இப்படியொரு கெட்ட பழக்கம் இருக்கா... ஜோதிகா போட்டுடைத்த சீக்ரெட்
36
‘தி சீக்குவல்’
Image Credit : intsgram/Suriya

‘தி சீக்குவல்’

இந்த சிறப்பு வீடியோவை சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுடன், ‘தி சீக்குவல்’ என குறிப்பிட்டுள்ளார். 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை மீண்டும் ஒரு புதிய அத்தியாயமாக கொண்டாடும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. ஜோதிகாவும் தங்களது திருமண வாழ்க்கையைப் பற்றிய நீண்ட நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார். திருமணம் என்பது குறைகளே இல்லாத பயணம் அல்ல என்றும், ஒருவரையொருவர் புரிந்துகொள்வது, விட்டுக்கொடுத்தல், மாற்றங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் நிபந்தனையற்ற அன்புடன் பயணிப்பதுதான் தங்களது உறவின் முக்கிய அம்சம் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Jyotika (@jyotika)

46
கணவராக மட்டுமல்ல.. சிறந்த நண்பராகவும் சூர்யா!
Image Credit : intsgram/Suriya

கணவராக மட்டுமல்ல.. சிறந்த நண்பராகவும் சூர்யா!

தனது வாழ்க்கையில் சூர்யா கணவராக மட்டுமல்லாமல், நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இருப்பதாக ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். இருவருக்குமிடையேயான நட்பை தங்களது உறவின் முக்கியமான அடித்தளமாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சூர்யாவுடன் அவ்வப்போது செல்லச் சண்டைகள் வந்தாலும், அதன்பிறகு சமாதானமாகி அவருடன் இன்னும் நெருக்கமாகும் ஒரு மனைவியாகவே தொடர்ந்து இருக்க விரும்புவதாகவும் ஜோதிகா உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.

56
உறுதிமொழி ஏற்ற ஜோதிகா
Image Credit : intsgram/Suriya

உறுதிமொழி ஏற்ற ஜோதிகா

தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்காக பல உறுதிமொழிகளையும் ஜோதிகா பகிர்ந்துள்ளார். வாழ்க்கையின் நேர்மறையான விஷயங்களை பார்க்கும் மகிழ்ச்சியான மனிதராக இருக்க வேண்டும், கிடைத்த வாழ்க்கைக்காக நன்றியுடன் இருக்க வேண்டும், ஆரோக்கியத்தை முதன்மையான சொத்தாக கருத வேண்டும் என்பன உள்ளிட்ட பல விஷயங்களை அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தனது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த தாயாக இருப்பதுடன், அவர்களது பெற்றோரின் காதல் மற்றும் பாசத்தை அவர்கள் எப்போதும் உணரும் வகையில் புன்னகையுடன் வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

66
அடுத்த 20 ஆண்டுகளுக்கும் காதல் தொடரும்!
Image Credit : intsgram/Suriya

அடுத்த 20 ஆண்டுகளுக்கும் காதல் தொடரும்!

தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நினைவுகூர்ந்த ஜோதிகா, அடுத்த இருபது ஆண்டுகளும் இன்னும் அதிகமான புரிதல், அன்பு மற்றும் நட்புடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார். சூர்யா–ஜோதிகா மீண்டும் திருமண கோலத்தில் தோன்றியுள்ள இந்த வீடியோவும், அவர்களின் நெகிழ்ச்சியான பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'Rolex' படம் வருமா? வராதா? முதன்முறையாக ரோலெக்ஸ் படம் பற்றி நடிகர் சூர்யா வெளியிட்ட அப்டேட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Related Stories
Recommended image1
சூர்யா - ஜோதிகா மகளா இது? அப்போ குழந்தை நட்சத்திரம்... இப்போ மும்பைல பெரிய லாயர்!
Recommended image2
சூர்யாவிடம் இப்படியொரு கெட்ட பழக்கம் இருக்கா... ஜோதிகா போட்டுடைத்த சீக்ரெட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved