பாலிவுட் பக்கம் சூர்யா-ஜோதிகா ...திடீர் விசிட் அடிக்க என்ன கரணம் தெரியுமா?
சூர்யா - ஜோதிகா இருவரும் மும்பை சென்றுள்ளார். இதுகுறித்தான புகைப்படம் வைரலாகி வருகிறது.

suriya 41
சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள எதற்கும் துணிந்தவன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதையடுத்து பிரபல இயக்குனர் பாலா உடன் சூர்யா இணைந்துள்ள படம் தான் சூர்யா 41. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
suriya in vikram
இதற்கிடையே கமல் நடிப்பில் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தில் காமியோ ரோலில் நடித்துள்ளார். விக்ரம் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து மூன்றாம் பாகத்தில் சூர்யா தான் நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Sruiya
சூர்யா 41 படத்தை அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் பல ஆண்டுகளாக முன் பணியோடு நின்றுள்ளது. மீண்டும் சமீபத்தில் சென்னையில் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போன்று செட் அமைக்கப்பட்டு போட்டோ சூட் எடுக்கப்பட்டதுடன் அப்டேட் வெளியாகவில்லை.
soorarai pottru
முன்னதாகா சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் பூஜைக்காக இந்த படத்தை தறிக்கும் 2டி இன்டர்நெஷனல் சார்பாக சூர்யா சென்றிருந்தார் அந்த புகைப்படம் வைரலானது.
SURIYA - JYOTHIKA
இந்நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா திடீரென மும்பைக்கு விசிட் செய்துள்ளனர். இவர்களது தயாரிப்பில் இந்தியில் உருவாகும் சூரரைப் போற்று படத்தின் ரீமேக் படப்பிடிப்பை காண இருவரும் சென்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சுதா கொங்கரா இயக்குக்கிறார். அக்ஷய் குமாருடன் ராதிகா மதன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.