MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Suriya jyothika : சினிமாவில் மீண்டும் டூயட் பாட தயாராகும் சூர்யா - ஜோதிகா... அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

Suriya jyothika : சினிமாவில் மீண்டும் டூயட் பாட தயாராகும் சூர்யா - ஜோதிகா... அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

Suriya jyothika : நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : Mar 03 2022, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் நடித்த போது, நண்பர்களாக இருந்த சூர்யா, ஜோதிகா பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிகளின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், தொடர்ந்து மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்தனர். கிட்ட தட்ட நான்கு வருடங்கள் காதலித்து, பெற்றோர் சம்மதம் பெற்று, கடந்த 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்தது சில்லுனு ஒரு காதல் திரைப்படம் தான். அதன்பின் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் இணைந்து 2டி என்கிற பட நிறுவனத்தை தொடங்கி, தொடர்ந்து பல்வேறு தரமான படங்களை தயாரித்து வருகின்றனர். 

34

அதுமட்டுமின்றி திருமணத்துக்கு பின்னர் ஜோதிகா நடித்த பெரும்பாலான படங்களை 2டி நிறுவனம் தான் தயாரித்தது. இந்நிலையில், நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், அவர்கள் இருவரும் பாலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

44

ஏற்கனவே பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் ஜோதிகாவும் நாச்சியார் படத்தில் நடித்திருக்கிறார். இதுவரை பாலா இயக்கத்தில் தனித்தனியாக நடித்த சூர்யாவும், ஜோதிகாவும் தற்போது முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... corona Kumar movie : கொரோனா குமார் படத்தின் மாஸ் அப்டேட்... புஷ்பா வில்லனை புரட்டி எடுக்க தயாராகும் சிம்பு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
இயக்குநர் பாலா
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved